22% சரிவில் இன்போசிஸ் பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்களின் கணிப்பு.. என்ன காரணம்?

சமீபத்திய வாரங்களாகவே இந்திய ஐடி நிறுவனங்களின் பங்குகள் மோசமான சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் விலையானது உச்சத்தில் இருந்து 22% சரிவில் காணப்படுகிறது.

இது காலாண்டு முடிவின் மத்தியில் மார்ஜின் விகிதத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக இப்பங்கின் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.

இது வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம். குறிப்பாக மேக்ரோ பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரிவினைக் கண்டு வருகின்றது.

இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு

இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு

23 - 25ம் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி ஏ ஜி ஆர் விகிதம் 11/15% ஆக இருக்கலாம் என ஜெஃப்ரீஸ் கணித்துள்ளது. எப்படியிருப்பினும் தற்போது வரையில் கிளவுட் சேவை என்பது குறைவாகவே உள்ளது. ஆக எதிர்கால வளர்ச்சிக்கு துணை புரியலாம். அமெரிக்காவின் குறைந்த வேலையின்மை விகிதமானது ஆஃப்ஸ்ஹோரிங்கினை தூண்டலாம். இது இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பினை கொடுக்கலாம்.

வாங்கலாம்

வாங்கலாம்

ஆக இதற்கிடையில் தான் இப்பங்கின் விலையானது வாங்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. இப்பங்கின் இலக்கு விலையை ஒரு பங்குக்கு 1830 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. எனினும் வளர்ச்சி விகிதம் என்பது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.

வளர்ச்சி கணிப்பு

வளர்ச்சி கணிப்பு

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது, அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சியினை பொறுத்து இருக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. ஜெஃபரீஸ் இன்ஃபோசிஸ்-ன் வளர்ச்சி விகிதத்தினை 2023ம் நிதியாண்டில் டாலரில் 14% வளர்ச்சி காணலாம் என்றும், 2025ம் நிதியாண்டில் 10% சரிவினைக் வரை வளர்ச்சி இருக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

கிளவுட் சேவை

கிளவுட் சேவை

நிறுவனங்களின் கிளவுட் சேவை என்பது தற்போது 40% மட்டத்தில் தேர்ந்தெடுத்துள்ளன. இதனால் தொழில் நுட்ப செலவுகள் இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றன. அமெரிக்காவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வேலையின்மை விகிதம், பலவீனமான பொருளாதார சூழல் ஐடி சந்தையில் ஒரு உத்வேகத்தினை கொடுக்கலாம். இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தினை கூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் அதிகரிக்கலாம்

ஏன் அதிகரிக்கலாம்

2024 - 25ம் நிடியாண்டில் வளர்ச்சி விகிதம் 9% அளவுக்கு சரியலாம். இருப்பினும் அடுத்த 2 ஆண்டுகளில் மார்ஜின் விகிதமானது 21.9% அளவுக்கு மீண்டு வரலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. ஏனெனில் தேவை மந்த நிலையானது சம்பளத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். கடந்த மார்ச் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதம் குறைந்த பயன்பாடு மற்றும் ஒப்பந்த விகிதம் சரிவு காரணமாக மார்ஜினில் தாக்கம் இருந்தது. எனினும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்ஃபோசிஸ் பங்கு விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+