மோர்கன் ஸ்டான்லி முக்கிய அறிவிப்பு.. அடி வாங்கிய இன்போசிஸ் பங்கு விலை..!

நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனம் இன்ஃபோசிஸ். தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது, டிவிடெண்ட் வழங்குவது போன்ற காரணங்களால் இந்நிறுவன பங்குக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இன்ஃபோசிஸ் பங்கு விலை சுமார் 5 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இன்ஃபோசிஸ் பங்கு ஒரே நாளில் அதுவும் வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் இந்த அளவுக்கு சரிவு கண்டு இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்ஃபோசிஸ் நிறுவன பங்கின் விலை வீழ்ச்சி பின்னணியில் மோர்கன் ஸ்டான்லி உள்ளது. மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இன்போசிஸ் குறித்த தனது மதிப்பீட்டை equal weightஆக குறைத்தது. மேலும், இன்ஃபோசிஸ் பங்கின் இலக்கு விலையை ரூ.2,150லிருந்து ரூ.ரூ.1,740ஆக குறைத்தது. மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குக்கு முன்பு overweight என்று ரேட்டிங் கொடுத்து இருந்தது. இதனையடுத்து பங்குச் சந்தையில் இன்று இன்ஃபோசிஸ் பங்கு விலை வீழ்ச்சி கண்டது.

மோர்கன் ஸ்டான்லி முக்கிய அறிவிப்பு.. அடி வாங்கிய இன்போசிஸ் பங்கு விலை..!

overweight பங்கு என்பது இன்டெக்ஸை காட்டிலும் சிறப்பாக செயல்படும் என்று நம்பப்படும் ஒரு பங்காகும். முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியாவில் இந்த பங்குக்கு அதிகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. equal weight பங்கு என்பது போர்ட்போலியாவில் உள்ள அனைத்து பங்குகளுக்கும் சமமான ஒதுக்கீடு செய்வதை குறிக்கிறது.

மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கூறுகையில், இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி மற்றும் மதிப்பீட்டு மடங்குகள் இரண்டிற்கும் எதிர்மறையான அபாயங்கள் உரவாகி வருவதை நாங்கள் காண்கிறோம் என்று தெரிவித்துள்ளது. மோர்கன் ஸ்டான்லி, ரேட்டிங்கை குறைத்ததையடுத்து, இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இன்ஃபோசிஸ் பங்கின் விலை சுமார் 5 சதவீதம் குறைந்து ரூ.1,578.35ஆக இருந்தது. நேற்று பங்குச் சந்தையின் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் ரூ.1,660.60ஆக இருந்தது.

கடந்த ஆண்டில் இன்ஃபோசிஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு 3.81 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. அதேசமயம் கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 11.41 சதவீதம் சரிந்தது, கடந்த வாரம் 1.58 சதவீதம் குறைந்ததும் அடங்கும். மோர்கன் ஸ்டான்லி இன்போசிஸ் பங்கின் ரேட்டிங்கை குறைத்தாலும், கடந்த வாரம் பல ஆய்வாளர்கள் இன்ஃபோசிஸ் பங்கு தொடர்பான தங்களது மதிப்பீட்டை அதிகமாக வைத்துள்ளனர். டிரெண்ட்லைன் அறிக்கையின்படி, பங்குகளை கண்காணி்க்கும் 40 ஆய்வாளர்களில், 28 பேர் இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டைக் கொண்டுள்ளனர். மேலும் இலக்கு விலையை ரூ.2,097ஆக கணித்துள்ளனர்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+