இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் இதுவரையில் செய்திடாத வகையில், ரூ.18,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய பங்குகளை சந்தையில் இருந்து மீண்டும் வாங்கும் Buyback திட்டத்தை அறிவித்துள்ளது. நேற்று வரையில் இதற்கான ஆலோசனை நடந்து வந்த நிலையில் பைபேக் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக நேற்று சரிவை சந்தித்த இன்போசிஸ் பங்குகள் இன்று அதன் பங்கு விலை வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் 2.3 சதவீதம் உயர்ந்து, அதிகப்படியாக ரூ.1,544.65-ஐ எட்டியது.
இந்த அறிவிப்பு, முதலீட்டாளர்களுக்கு பங்கு முதலீட்டுக்கான மதிப்பை திரும்ப வழங்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்போசிஸ் இந்த ஆண்டு எதிர்கொண்டு வந்த மோசமான வர்த்தக நிலையை சமாளிக்கவும், பங்கு விலையை உயர்த்தும் முயற்சியாகவும் இதை பார்க்கப்படுகிறது.

இன்போசிஸின் மிகப்பெரிய பைபேக் திட்டம்
இன்போசிஸ், டெண்டர் ஆபர் முறையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த பைபேக் திட்டத்தின் மூலம், சுமார் 10 கோடி பங்குகளை, அதாவது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமார் 2.41 சதவீதத்தை சந்தையில் இருந்து திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி ஒரு பங்குக்கு ரூ.1,800 என்ற விலையில் பங்குகளை ஓப்பன் மார்கெட்டில் இருந்து இன்போசிஸ் வாங்கும்.
இது வியாழக்கிழமை வர்த்தக முடிவு விலையான ரூ.1,512-ஐ விட 19 சதவீதம் அதிகமாகும். இது, இன்போசிஸ் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு மேற்கொண்ட மிகப்பெரிய பைபேக் திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கான பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் வலுவான நிதி நிலை
ஜூன் மாத இறுதியில், இன்போசிஸ் நிறுவனத்திடம் சுமார் ரூ.40,000 கோடி மதிப்பிலான பணத்தை இருப்பாக வைத்திருந்தது. இந்த வலுவான நிதி நிலை, ஐடி துறையில் தற்போது ஏற்பட்டு உள்ள நிச்சயமற்ற பொருளாதார மற்றும் வர்த்தக சூழலில் நிறுவனத்திற்கு பெரும் பலமாக உள்ளது.
இந்த பண இருப்பின் காரணமாகவே தற்போது சந்தையில் இருக்கும் 10 கோடி பங்குகளை வாங்குகிறது. இந்த நடவடிக்கை, காலம் காலமாக இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. சந்தையில் புழக்கம் குறையும் போது பங்கு விலை தானாக உயரும் என்பதை மறந்துவிட கூடாது.
என்ன நன்மை..?
இந்த பைபேக் திட்டம் மூலம் ஒரு நிறுவனத்தின் EPS மற்றும் மூலதனத்தின் மீதான வருவாய் (ROE) போன்ற முக்கிய மெட்ரிக்ஸ்களை மேம்படுத்த உதவும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், ஈவுத்தொகை (dividends) உடன் ஒப்பிடுகையில், பைபேக் திட்டம் முதலீட்டாளர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
பங்கு விலையில் மாற்றம்:
இன்போசிஸின் பங்கு விலை வியாழக்கிழமை வர்த்தகத்தில், 1.3 சதவீதம் சரிந்து ரூ.1,512-இல் முடிவடைந்தது. இன்று காலை 2.3 சதவீதம் வரையில் அதிகப்படியாக காலை வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இன்போசிஸ் பங்கு விலை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது, முதலீட்டு சந்தையில் பெரும் விவாத பொருளாக உள்ளது.
பைபேக் திட்டத்தின் லாபம்
வரலாற்று ரீதியாக பார்க்கும் போது இன்போசிஸின் பைபேக் அறிவிப்புகளுக்கு பிறகு, 3 முதல் 6 மாத காலத்தில் பங்கு விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பங்குச்சந்தை சந்தை நிபுணர்கள், குறுகிய காலத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.
ஆனால் இன்போசிஸ் தற்போது 18000 கோடி ரூபாய் மதிப்பில் பைபேக் திட்டத்தை செயல்படுத்துவது சரியா..? இந்த ஏஐ யுகத்தில் இன்போசிஸ் செய்ய வேண்டியது என்ன..? மக்களே கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications