இந்திய ஐடி நிறுவனங்கள் பலவும் நடப்பு ஆண்டில் பெரும் சரிவினைக் கண்டுள்ளன. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் சரிவினைக் கண்டுள்ளன. இந்த போக்கு அடுத்த ஆண்டு எப்படியிருக்கும்?
குறைந்த விலையில் உள்ள ஐடி பங்குகளை வாங்கலாமா? அதுவும் இந்த சவாலான காலகட்டத்தில் வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
விப்ரோ பங்கு விலை
ஐடி நிறுவனங்களில் விப்ரோ மிக மோசமான சரிவினைக் இந்த ஆண்டு கண்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் 45% சரிவினைக் கண்டுள்ளது. விப்ரோவின் பங்கு விலையானது கடந்த டிசம்பர் 3, 2021ல் 715.20 ரூபாயாக இருந்தது. இன்று அதன் விலை 394.95 ரூபாயாக உள்ளது. இன்ஃபோசிஸ் பங்கு விலையானது 18.19% சரிவிலும், டிசிஎஸ் பங்கு விலையானது 11.45% சரிவினைக் கண்டுள்ளது.
1 வருடத்தில் எவ்வளவு சரிவு
இதே கடந்த ஒரு வருடத்தில் விப்ரோ பங்கு விலையானது 38% வீழ்ச்சி கண்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 11%மும், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 7.3% சரிவிலும் காணப்படுகிறது.
ஐடி பங்குகளில் பலவீனம் அரசியல் பதற்றங்களால் சரிவினைக் கண்டு வருகின்றது. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகம் முழுக்க பல நாடுகளில் வணிக நடவடிக்கைகளின் வாய்ப்புகளை குறைத்துள்ளது.
வருவாய் சரிவு
உக்ரைனில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளுக்கான நெருக்கடியும் இருந்து வருகின்றது. இது முக்கியமான வாடிக்கையாளர்கள் மத்தியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்களின் வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் பெரும் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளன.
ஐடி இன்டெக்ஸ்
நடப்பு ஆண்டில் ஐடி இன்டெக்ஸ் ஆனது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. பிஎஸ்இ ஐடி குறியீடானது 22.58% சரிவிலும், நிஃப்டி ஐடி 24.54% சரிவிலும் நடப்பு ஆண்டில் சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த 1 வருடத்தில் நிஃப்டி ஐடி குறியீடானது 18.27%மும், பிஎஸ்இ ஐடி குறியீடானது 16.45%மும் சரிவினைக் கண்டுள்ளது.
வாங்கலாமா?
தற்போதைய ஏற்ற இறக்கத்தின் மத்தியில் மீடியம் டெர்மில், முதலீட்டாளர்கள் ஐடி பங்குகளை பரிந்துரை செய்து வருகின்றனர். ஐடி பங்குகளில் நடப்பு ஆண்டில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது உலகளாவிய சந்தை வீழ்ச்சி மற்றும் மந்த நிலைக்கு மத்தியில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில் குறைந்த விலையில் உள்ள இந்த பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
விரைவில் சீரடையலாம்
இது குறித்து ஷேர் இந்தியா நிறுவனம், சில காலமாக போராடி வருகின்றனர். இருப்பினும் ரூபாய் மதிப்பு சரிவால் இந்த துறை சற்றே பலனடைந்தது. ஐடி துறைகளின் அதிக வருவாய் அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் இருந்து வருகின்றது. இந்த நாடுகள் தற்போது பல தலைவலிகளை எதிர்கொண்டு வருகின்றது. எனினும் விரைவில் இது சீரடையக் கூடும், இதன் காரணமாக ஐடி நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்க கூடும். இது பங்கு விலை அதிகரிக்க காரணமாக அமையக்கூடும். மொத்தத்தில் ஐடி பங்குகள் மீண்டும் நம்பிக்கைக்குரிய பங்குகளாக மாறக்கூடும்.
நல்ல போர்ட்போலியோ பங்குகள்
விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் மிக நல்ல போர்ட்போலியோ பங்குகளாகும். இதன் வருவாய் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசிஎஸ் மற்றும் விப்ரோ, இன்ஃபோசிஸ் பங்குகள் தற்போது வாங்ககூடிய நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் லாபகரமான பங்குகளாக இருக்கலாம். ஆக பண்டமெண்டலாக இப்பங்குகள் நல்ல லாபகரமான பங்குகளாக இருக்கலாம்.
இன்போசிஸ் & டிசிஎஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இலக்கு விலையாக 1750 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இலக்கு விலையாக 4000 ரூபாயாகவும், 4650 - 5050 ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications