தமிழ்நாடு கொடுத்த ஜாக்பாட் ஆர்டர்.. ஐநாக்ஸ் விண்ட் பங்கு விலை கிடுகிடு உயர்வு

ஐநாக்ஸ் குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களில் ஒன்று ஐநாக்ஸ் விண்ட் லிமிடெட். இந்நிறுவனம் காற்றாலை விசையாழி ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு சேவை வழங்கும் காற்றாலை எனர்ஜி தீர்வுகள் வழங்குநராகும். இந்நிறுவனம் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்களை பெற்று வருவது முதலீட்டாளர்களுக்கு அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தற்போது ஐநாக்ஸ் விண்ட் லிமிடெட் நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி டெவலப்பரிடமிருந்து 153 மெகா வாட் ஆர்டரை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அமையும் இந்த திட்டத்தில் ஐநாக்ஸ் விண்ட் லிமிடெட் நிறுவனம் தனது 3 மெகா வாட் கிளாஸ் விசையாழிகளை வழங்கும், செயல்பாடுகளை கையாளுதல் மற்றும் நிறுவியதற்கு பிறகு பராமரிப்பு ஆகியவற்றையும் இந்நிறுவனம் மேற்கொள்ளும். இந்த செய்தி வெளியானதையடுத்து, இன்று காலையில் பங்குச் சந்தையில் ஐநாக்ஸ் விண்ட் லிமிடெட் பங்கின் விலை ஏற்றம் கண்டது.

தமிழ்நாடு கொடுத்த ஜாக்பாட் ஆர்டர்.. ஐநாக்ஸ் விண்ட் பங்கு விலை கிடுகிடு உயர்வு

இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 11 சதவீதம் அதிகரித்து ரூ.170.00ஆக இருந்தது. கடந்த 3 மாதங்களில் இந்நிறுவன பங்கின் விலை 25 சதவீதம் சரிவு கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் காலாண்டில் ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்தின் வருவாய் சிறப்பாக வளர்ச்சி கண்டு இருந்த நிலையில், தற்போது இந்த ஆர்டர் அந்நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்தின் வருவாய் ரூ.994 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.507 கோடியாக இருந்தது.

2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.239 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டில் ரூ.33 கோடி என்ற அளவில்தான் இருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி. ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் 3,286 மெகா வாட் அளவுக்கு ஆர்டர்களை கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 28 சதவீதம் அதிகமாகும். 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம் 2.575 மெகா வாட்டாக இருந்தது.

Story written by: Subramanian

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+