அமெரிக்காவை சேர்ந்த மிகவும் பிரபலமான நிறுவனம் இன்டெல். இந்நிறுவனம் டேட்டா சென்டர்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் சிப் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இத்துறையில் பல தசாப்தங்களாக கொடி கட்ட பறந்த இன்டெல் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக பல முனைகளில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இன்டெல் நிறுவனம், தரவு மையங்கள் (டேட்டா சென்டர்கள்) தனிநபர் கணினிகள் ஆகிய இரண்டிலும் தனது சந்தை பங்கை கணிசமாக இழந்துள்ளது. மேலும் சிப் வணிகத்தில தனது சந்தை பங்களிப்பை இந்நிறுவனம் இழந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இன்டெல்லின் பங்கு விலை சுமார் 60 சதவீதம் சரிவு கண்டுள்ளது. ஏஐ தேவையை பயன்படுத்திக் கொண்ட போட்டியாளர்களுடன் போட்டியிட முடியாத இன்டெல்லின் இயலாமையால் முதலீட்டாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இன்டெல் நிறுவனம் அதுவரை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பாட் கெல்சிங்கரை அதிரடியாக நீக்கியது. இதனால் இந்நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில் தற்போது இன்டெல் நிறுவனம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிப் பு டானை அறிவித்தது. இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று இன்டெல் பங்கு விலை 14 சதவீதம் உயர்ந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் இன்டெல் பங்கு விலை 14.60 சதவீதம் அதிகரித்து 23.70 டாலராக உயர்ந்தது. வலுவான தலைவராக பார்க்கப்படும் லிப் பு டான், இன்டெல் நிறுவனத்துக்கு புதியவர் அல்ல.
இன்டெல்லின் முன்னாள் வாரிய உறுப்பினராக இருந்த லிப் பு டான், நிறுவனத்தின் உத்தி குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். செயற்கை நுண்ணறிவு ஏற்றத்தை இழந்த பிறகு, செமிகண்டக்கர் துறையில் இன்டெல் தனது நிலையை மீண்டும் பெற போராடி வரும் ஒரு முக்கியமான நேரத்தில் லிப் பு டான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக வந்திருப்பது அந்நிறுவனத்துக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
லிப் யு டான் வருகை குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், டானின் நியமனம் இன்டெல்லுக்கு சிறந்த விளைவுகளில் ஒன்றாகும். இன்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரியாக டான் பொறுப்பேற்றது, பங்குதாரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. சிப் துறையில் அவரது ஆழமான உறவுகள் இன்டெல்லின் ஒப்பந்த உற்பத்தி வணிகத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வர உதவும் என தெரிவித்தனர். லிப் பு டான் அடுத்த வாரம் முறைப்படி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். அவரது வருகை இன்டெல் நிறுவனத்தின் உத்தியில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications