இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை அதிகளவில் குறைத்தது. இதன் எதிரொலியாக வணிக வங்கிகள் அனைத்தும் வீட்டுக் கடன் முதல் வாகன கடன் வரையில் அனைத்து முக்கியக் கடன்களுக்குமான வட்டியைக் குறைத்தது.
கார் லோன்
இதன் எதிரொலியாக வீடு வாங்குவோரும், கார் மற்றும் பைக் வாங்குவோருக்கு மிகவும் சிறப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் புதிதாகக் கார் வாங்குவோருக்கு எந்த வங்கியில் குறைவான வட்டியில் கடன் கொடுக்கப்படுகிறது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிறப்புச் சலுகை
பொதுவாகக் கார் லோன் மூன்று முதல் 5 வருட காலக் கடனாக அளிக்கப்படும், ஆனால் தற்போது பல வங்கிகளில் சிறப்புச் சலுகையாக 7 வருடத்திற்கும் கார் வழங்கப்படுகிறது. 7 வருடத்திற்குக் கடன் பெறும் போது கடனுக்கான ஈஎம்ஐ குறையும். இதனால் காரை எளிதாக வாங்க முடியும். மேலும் பொதுவாகக் கார் லோனுக்கு எக்ஸ் ஷோரூம் விலையில் 80 சதவீதம் தொகை கடனாக அளிக்கப்படுகிறது.
குறைவான வட்டி விகிதம்
இந்நிலையில் எந்த வங்கியில் குறைவான கடன் அளிக்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம். பிப்ரவரி மாதம் 18தேதியின் நிலவரப்படி எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி விகிதத்தில் கார் லோன் அளிக்கப்படுகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு கார் கடனை பெற திட்டமிடுங்கள்
வட்டி விபரங்கள்
- ஜம்மு & காஷ்மீர் வங்கி : 7.95- 8.70 சதவீத வட்டி
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா : 7.70- 11.20 சதவீத வட்டி
- இந்தியன் வங்கி : 7.65 - 8.15 சதவீத வட்டி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி : 7.55 சதவீத வட்டி
- ஐடிபிஐ வங்கி : 7.50 - 8.10 சதவீத வட்டி
- பாங்க் ஆப் இந்தியா : 7.45 - 8.65 சதவீத வட்டி
- யூகோ வங்கி : 7.45 -7.70 சதவீத வட்டி
- கனரா வங்கி : 7.30 - 9.90 சதவீத வட்டி
- பாங்க் ஆப் மகாராஷ்டிரா : 7.30 - 8.80 சதவீத வட்டி
- பஞ்சாப் நேஷனல் வங்கி : 7.30 - 7.80 சதவீத வட்டி
- யூனியன் பேங்க் ஆப் இந்தியா : 7.15 - 7.50 சதவீத வட்டி
- பாங்க ஆ பரோடா : 7.10 - 10.10 சதவீத வட்டி
- பஞ்சாப் & சிந்த் வங்கி : 7.10 -7.90 சதவீத வட்டி
- சென்டரல் பேங்க் ஆப் இந்தியா : 6.85 - 7.80 சதவீத வட்டி


Click it and Unblock the Notifications