மும்பை பங்குச் சந்தையானது இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தை ஆகும்.
மும்பை பங்குச் சந்தையானது இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தை ஆகும்.
இது 1875ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்ப ஐபிஓ ரூபாய் 1,241 கோடி ஆகும். மும்பை பங்குச் சந்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை நாம் இங்குத் தெரிந்து கொள்வோம்.

உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை
ஏறத்தாழ 5900 நிறுவனங்களின் பங்குகள் இங்கு உள்ளன. இதன் மூலம் 1,241 கோடி ரூபாய் மதிப்பிலான பொது பங்குப் பத்திரம் மற்றும் பங்குகள் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. உலகில் 10வதும், ஆசியாவில் 4வதுமான பெரிய பங்குச் சந்தை. மும்பை பங்குச் சந்தையில் 1.7 டிரில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
நடுநிலை முதலீட்டாளர்கள்
சுமார் 9,000 மும்பை பங்குச் சந்தையின் பங்குதாரர்கள் உள்படச் சிங்கப்பூர் பங்குச் சந்தை, மொரிஷியஸ் சார்ந்த அமெரிக்க முதலீட்டாளர்கள், ஜார்ஜ் சோரோஸ் குவாண்டம் ஆகிய முதலீட்டாளர்களிடம் இருந்து ஐபிஓ மூலம் நிதி அதிகரிப்புச் செய்யப்படுகிறது. முப்பை பங்குச் சந்தையானது 28 சதவீத மதிப்பிலான பங்குகளை நீர்த்துப்போகச் செய்கிறது.
NSE ல் பட்டியலிடப்படுகிறது
இந்தியாவின் பொருளாதாரப் பரிமாற்றங்களை நெறிமுறைப்படுத்தும் செபி (SEBI) அமைப்பின் சட்டக் கட்டுப்பாட்டில் இது இருக்கின்றது. சந்தையின் மென்மையான செயல்பாட்டிற்காகச் சந்தையின் நிர்வாகத்திற்குச் சுதந்திரமாகச் செயல்படும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையின் பங்குகளை அதன் முக்கியப் போட்டியாளரான தேசிய பங்குச் சந்தையின் தளத்தில் பட்டியலிடப்படும்.
எளிமையான தொடக்கத்திலிருந்து
மும்பை பங்குச் சந்தை அதிகாரப்பூர்வமாக 1875 ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் பங்குச் சந்தை வளர்வதற்குப் பல ஆண்டுகளாக ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் பல கட்டுப்பாட்டு இடையூறுகள் தடையாக இருந்தது. 1850 ல் மும்பை நகரச் சபை மண்டபத்தில் ஆல மரத்தின் கீழ் குழு அமைத்து சிறிய முதலீட்டாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.
விரைவில், இதன் புகழ் உயர்ந்து போதுமான பங்கு முகவர்கள் மற்றும் வர்த்தகத் தரகர்கள் சேர்ந்தனர். இதனால் சாலையில் கூட்டம் கூடியதால் சாலையைக் கடந்து 1874 ல் சொந்த கட்டிடத்திற்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
ருபாய் 1 லிருந்து ......
சுமார் 25 பங்கு தாரர்கள், 1875 ல் பங்கு மற்றும் பங்கு வர்த்தகர்கள் சங்கத்தில் தொடக்கத்தில் 1 ரூபாய் முதலீடு செய்து களமிறங்கினார்கள்.
முப்பையில் தலால் வீதியில் இந்தியாவின் வழக்கறிஞர் கட்டிடத்தின் தரை தளத்தை மாதம் 100 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தனர். இந்தியர்கள் மட்டுமே இதில் சேர முடியும் எனத் தலால் தரகர்கள் குறிப்பிட்டனர்.
கடினமான சாலைகள்
அந்நாளில், ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் வாடகை கொடுப்பது தரகர்களுக்குப் பெரிய அளவாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் முதல் ஜவுளி ஆலையின் நிறுவனர் தின்ஷா மனேக்ஜி பெட்டிட் இவர்களுக்கு உதவினார்.
பெட்டிட் தரகர்களுக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்து அதற்குப் பதிலாக 25 பங்குகளை வாங்கினார்.
ஒவ்வொரு பங்கும் ரூபாய் 690 வீதம் மொத்தம் 25 பங்குகள் ரூ 17,250 க்கு பெட்டிட்க்கு விற்கப்பட்டது, அதில் ரூ 2,393 முன்பணமாகக் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள தொகை 14, 857 ரூபாயைஆரம்ப மூலதனமாகக் கொண்டு தேசிய பங்கு வர்த்தகத் தரகர்களால் தொடங்கப்பட்டது என 'BSE : Journey of an aspiring nation' என்ற நூலில் ஆசிரியர் சமீர் கோச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அலுவலகம்
1899 ல் இந்தக் குழுமம் சர் டின்ஷா பெட்டிட் தரகர்கள் ஹாலுக்கு இடம் பெயர்ந்தது. இதற்கிடையில் இந்தியாவின் பிற நகரங்களான அகமதாபாத்தில் 1894 ல், கல்கத்தாவில் 1908 ல் , சென்னையில் 1937 ல் , ஹைதராபாத்தில் 1944 ல் பங்குச் சந்தை நிறுவப்பட்டது.
எனினும் 1980ம் ஆண்டில் தான், பிஎஸ்இ இறுதியாகத் தெற்கு பாம்பேயின் Phiroze Jeejeebhoy Tower ல் செயல்பட்டு வருகிறது. இது Horniman Circle லிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அளவுகோல்
மும்பை பங்குச் சந்தை இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அளவுகோலாகத் திகழ்கிறது. மேலும் சென்செக்ஸ் பிஎஸ்இ ல் முக்கியக் குறியீடாக உள்ளது. சென்செக்ஸ் 1986 ல் தொடங்கப்பட்டுப் பெரிய மற்றும் பங்குச் சந்தையின் செயலாக்கத்துடனும் பரிவர்த்தனைகளுடனும் 30 பங்குகளைக் கொண்டுள்ளது. BSE Finance, Energy, Infra, Small Cap, Mid Cap and FMCG ஆகியவை பிஎஸ்இ- யின் முக்கியக் குறியீடுகள் ஆகும்.


Click it and Unblock the Notifications