Intraday Stocks: வெள்ளிக்கிழமை முதலீடு செய்ய சூப்பர் பங்கு.. நிபுணர் பரிந்துரை..!!

நிஃப்டி குறியீடு வியாழன்கிழமை வர்த்தகத்தில் 100.60 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 25,111.45-இல் முடித்தது. நிஃப்டி வங்கி முந்தைய இரண்டு நாட்களில் மீட்சி அடைந்த பிறகு, நேற்று 0.59% குறைந்து 56,828.80-இல் முடித்தது. இதேபோல், இந்தியா VIX 0.02% குறைந்து 11.24-இல் முடிந்து, 13 புள்ளிகள் என்ற மட்டத்திற்கு கீழேயே உள்ளது.

நிஃப்டி குறியீடு கடந்த நான்கு வர்த்தக நாளில் மந்தமான வர்த்தகத்தையே பதிவு செய்துள்ளது, வர்த்தகம் தடுமாறினாலும் ஒரு சிறிய அளவிலேயே குறைந்துள்ளது. இதனால் சந்தையில் பெரிய பதற்றம் இல்லை என்பதையும் இந்த 4 நாள் வர்த்தகத்தில் கட்டியுள்ள நிலையில், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று வர்த்தகம் எப்படியிருக்கும் என்பதை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Intraday Stocks: வெள்ளிக்கிழமை முதலீடு செய்ய சூப்பர் பங்கு.. நிபுணர் பரிந்துரை..!!

இந்த நிலையில் வியாழன்கிழமை இந்தியா VIX 0.02% உயர்ந்து 11.2425-ஆக உள்ளதை கருத்தில் கொண்டு, சாய்ஸ் புரோகிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுமித் பகடியா இன்று, ஜூலை 18-இல் முதலீடு செய்ய இரண்டு பங்குகளை பரிந்துரைத்துள்ளார்.

புரூடென்ட் கார்ப்ரேட் அட்வைசரி சர்வீசஸ்
புரூடென்ட் (PRUDENT) தற்போது ரூ.2,903-இல் வர்த்தகம் செய்கிறது, நேற்றைய வர்த்தகத்தில் எவ்விதமான அதிரடியும் இல்லாமல் நிலையான வர்த்தகத்தில் ரூ.2,920.10 என்ற உச்சத்தை தொட்டது கவனிக்கப்ட வேண்டிய விஷயமாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த பங்கு அனைத்து முக்கிய EMAகளையும் (எக்ஸ்போனென்சியல் மூவிங் ஆவ்ரேஜ்) தாண்டி, நடுத்தர காலத்தில் உயரும் வாய்ப்பை பெற்றுள்ளதாக சுமித் கூறுகிறார்.

கடந்த சில வாரங்களாக புரூடென்ட் கார்ப்ரேட் பங்குகள் ரூ.2,600-ரூ.2,800 வரையிலான விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சிக்கலான நிலையை வெற்றிகரமாக தாண்டியுள்ளது. புரூடென்ட் கார்ப்ரேட் பங்குகள் பல ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டாலும், நேற்றைய வர்த்தகம் இப்பங்குகளை 3000 ரூபாய் மேல் வர்த்தகமாகும் என நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இந்த பங்குகள் 2930 ரூபாய் அளவை தாண்டி சில காலம் நிலை நிறுத்தினால், குறுகிய கால அடிப்படையில் இப்பங்குகள் ரூ.3,000-ரூ.3,100 வரை உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இப்பங்குகள் ரூ.2,850 வரை குறைந்தாலும், buy-on-dips வாய்ப்பாக கருதி வாங்கலாம் என சமித் கூறுகிறார். தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் சந்தை நிலைமையை அடிப்படையாகக் கொண்டு இந்த பங்குகளை வாங்குவோர் ரூ.3,100 இலக்கு நோக்கி முதலீடு செய்யலாம், அதேபோல் 2800 அளவில் ஸ்டாப் லாஸ் வைத்து ஆபத்தை குறைத்துக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

அரவிந்த் ஃபேஷன்ஸ் (ARVIND FASHIONS) தற்போது ரூ.493.15-இல் உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் இப்பங்கு ரூ.460.40 என்ற குறைவான அளவில் இருந்து ரூ.499.80 என்ற உச்சத்தை தொட்டது பலராலும் கவனிக்கப்பட்டது. இப்பங்குகள் பல வாரங்களாக இருந்த மந்தநிலையில் இருந்து உடைத்து, ஒரே நாளில் பல எதிர்ப்பு நிலைகளை தாண்டியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ரூ.450-ரூ.480 இடைவெளியில் வர்த்தகம் செய்த இந்த பங்கு, அடிப்படை வளர்ச்சி பாதையை வலுவாக உருவாக்கியுள்ளதை தான் அதன் சமீபத்திய வர்த்தகத்தை காட்டுகிறது. இந்த பங்கு தற்போது ரூ.480-ரூ.485 என்ற உடனடி எதிர்ப்பு மண்டலத்தை கடந்து, ரூ.495-ரூ.500 மட்டத்தில் நிலைநிறுத்தினால், ரூ.520 மற்றும் ரூ.525 நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது என சமித் கணித்துள்ளார். மேலும் இந்த பங்கிற்கு தற்போது ரூ.480 என்ற சப்போர்ட் அளவுகள் உள்ளது.

ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்க்த் இண்டெக்ஸ் (RSI) 60.37-இல் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு, முதலீட்டாளர்கள் ரூ.475-இல் ஸ்டார் லாஸ் அளவை அமைத்து, ரூ.493.15-இல் முதலீடு செய்தால் ரூ.525 என்ற இலக்கை நோக்கி நடுத்தர காலத்தில் உயர வாய்ப்புள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+