மிஸ் பண்ணிடாதீங்க.. திங்கட்கிழமை வாங்க சூப்பர் பங்குகள் - நிபுணர் பரிந்துரை..!

இந்திய பங்குச் சந்தை, இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களின் முதல் காலாண்டு (Q1) முடிவுகளின் ஏமாற்றமளிக்கும் வகையில் தொடங்கியுள்ளது மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரி அச்சுறுத்தல் காரணமாக உள்நாட்டில் மட்டும் அல்லாமல் உலகளாவில் வர்த்தக பதற்றங்கள் அதிகரித்ததால், கடந்த வார இறுதியில் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்ததுள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 205.40 புள்ளிகள் குறைந்து 25,149.85 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 82,500.47 புள்ளிகளிலும் கடந்த வாரத்தின் குறைந்த அளவில் முடிவடைந்தன. இதேபோல் வங்கி நிஃப்டி 201.30 புள்ளிகள் சரிந்து 56,754.70 புள்ளிகளில் முடிவடைந்தது.

மிஸ் பண்ணிடாதீங்க.. திங்கட்கிழமை வாங்க சூப்பர் பங்குகள் - நிபுணர் பரிந்துரை..!

இந்த சரிவுக்கு, இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எதிர்பார்ப்புகளை விட குறைவான லாபம் மற்றும் வருவாய் அளவீட்டை அறிவித்தது முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும், இந்தியா VIX குறியீடு, 1.24% மட்டுமே உயர்ந்து 11.81 ஆக முடிவடைந்து. இதனால் அதன் ஆபத்தான அளவை குறிக்கும் 15-ஐ விட குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIX குறியீடு 15 சதவீத அளவீடிட்டை எட்டாததும், 1.24% மட்டுமே உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது சந்தையில் விற்பனை அதிகமாக இருந்தாலும், முதலீட்டாளர்களிடையே பயம் மிகவும் குறைவாக இருப்பதை காட்டுகிறது. இந்த சூழலில், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஏற்ற 2 பங்குகளை பிரபல பங்குச்சந்தை நிபுணர் பரிந்துரைத்துள்ளார்.

நச்சுன்னு 2 பங்குகள்:
இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவுக்கு மத்தியில், சாய்ஸ் புரோக்கிங்கின் நிர்வாக இயக்குநர் சுமீத் பாகடியா, ஜூலை 14, 2025 திங்கட்கிழமைக்கு இரண்டு பங்குகளை முதலீடு செய்ய பரிந்துரைத்தார்: ஃபேஸ் த்ரீ (FAZE3Q) மற்றும் பாண்டி ஆக்ஸைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் (POCL).

ஃபேஸ் த்ரீ (FAZE3Q):
ஃபேஸ் த்ரீ பங்கு 653 ரூபாயில் வர்த்தகமாகி, இன்றைய வர்த்தகத்திற்கு வலுவான உயர்வை பதிவு செய்ய தயாராக உள்ளது. இந்த பங்கு, குறுகிய கால ஒருங்கிணைப்பு நிலையை உடைத்து, இதேபோல் சந்தையில் வால்யூம் அடிப்படையில் அதிகப்படியான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. இந்த பங்கு, 601 ரூபாய் என்ற குறைந்த அளவிலிருந்து மீண்டு, உயர்வான அளவில் முடிவடைந்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் முதலீட்டாளர்கள் 666 ரூபாய் என்ற எதிர்ப்பு நிலையை உடைத்தால், இந்த பங்கு 700 ரூபாய் என்ற இலக்கை எட்டலாம். மேலும் 630 ரூபாயில் ஸ்டாப்-லாஸ் வைத்து முதலீடு செய்ய சுமித் பாகடியா பரிந்துரைத்தார்.

பாண்டி ஆக்ஸைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் (POCL):
பாண்டி ஆக்ஸைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் (POCL) பங்கு, 970.1 ரூபாயில் வர்த்தகமாகி, வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்தது. இந்த பங்கு, 900 ரூபாய் என்ற முந்தைய எதிர்ப்பு மண்டலத்தை (resistance zone) உடைத்து, புதிய வளர்ச்சி பாதையை தொடங்கியது.

ஜூன் மாத தொடக்கத்திலிருந்து, இந்த பங்கு அதிகப்படியான உச்சங்களையும், சரிவுகளையும் அடைந்து தற்போது வலுவான ஏற்றுமுகத்தை வெளிப்படுத்துகிறது. 1,000 ரூபாய் என்ற சைக்காலஜிக்கல் ரெசிஸ்டன்ஸ் அளவை கடந்தால், இந்த பங்கு 1,040-1,060 ரூபாய் இலக்கை எட்டலாம். 935 ரூபாயில் ஸ்டாப்-லாஸ் வைத்து முதலீடு செய்ய பரிந்துரைத்துள்ளார் சுமித் பகாடியா. இந்த இரு பங்குகளில் முதலீடு செய்யும் முன் RSI மற்றும் EMA அளவுகள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

RSI மற்றும் EMA எளிய விளக்கம்:
தொழில்நுட்ப பகுப்பாய்வில், உறவு வலிமை குறியீடு (Relative Strength Index - RSI) மற்றும் எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் (Exponential Moving Average - EMA) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு பங்குகளின் இயக்கத்தை புரிந்துகொள்ள உதவும் முக்கிய கருவிகளாகும்.

RSI என்பது ஒரு பங்கின் விலை இயக்கத்தின் வேகத்தையும் வலிமையையும் அளவிடும் குறியீடாகும், இது 0 முதல் 100 வரை உள்ள அளவில் கணக்கிடப்படுகிறது. RSI அளவும் பங்கு விலையும் எதிர் திசையில் பயணிக்கும். உதாரணமாக RSI 70-ஐ தாண்டினால், இந்த பங்கு அதிகளவில் வாங்கப்பட்டு, விலை சரிய வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது. 30-க்கு கீழே இருந்தால், பங்கு அதிகமாக விற்கப்பட்டு, விலை உயர வாய்ப்புள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

ஃபேஸ் த்ரீயின் RSI 61.37 ஆகவும், POCL-இன் RSI 71.37 ஆகவும் உள்ளது, இவை இரண்டும் வாங்கல் வலிமையை குறிக்கின்றன, ஆனால் POCL-இன் RSI அதிகமாக உள்ளதால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இவ்விரு பங்குகளும் குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றதாக உள்ளது எனவும் சுமித் பகாடியா பரிந்துரைத்துள்ளார்.

EMA என்பது ஒரு பங்கின் விலையின் சராசரி அளவீட்டில், சமீபத்திய விலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கணக்கிடும் ஒரு குறியீடாகும். இது 20, 50, 100, மற்றும் 200 நாள் EMAகளாக பிரிக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. ஒரு பங்கு, இந்த EMAகளுக்கு மேலே வர்த்தகமாகும்போது, அது ஏற்ற போக்கில் இருப்பதாக கருதப்படுகிறது.

ஃபேஸ் த்ரீ மற்றும் POCL ஆகிய இரு பங்குகளும், முக்கிய EMAகளுக்கு மேலே வர்த்தகமாகி, வலுவான ஏற்ற இயக்கத்தை வெளிப்படுத்துகின்றன. EMAகள், பங்கு விலையின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகளை அடையாளம் காண உதவுகின்றன, மேலும் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு முடிவுகளை எடுக்க இது முக்கியமான காரணிகளாக உள்ளன.

முதலீட்டு உத்திகள்:
நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளின் சரிவு, முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் அளவீட்ட மறுசீரமைப்பு செய்ய வேண்டியதை உணரத்துகிறது. ஃபேஸ் த்ரீ மற்றும் POCL பங்குகள், வலுவான தொழில்நுட்ப அமைப்பு மற்றும் அதிகரித்த வர்த்தக தொகுதியுடன், குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவையாக உள்ளன. இருப்பினும், முதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் முதலீட்டு செய்ய முக்கிய எதிர்ப்பு நிலைகளையும், சந்தை போக்கையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+