Intraday Stocks to Buy: 2 முக்கிய பங்குகள்.. நிபுணரின் அசத்தலான பரிந்துரை..!!

இந்திய பங்குச்சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் வங்கி நிஃப்டி குறியீடு 10.65 புள்ளிகள் சிறிதளவு அதிகரித்து, 56,765.35 புள்ளிகளாக முடிவடைந்தது, இது அதன் இரண்டாவது நாளாக குறைவான செயல்பாடாக இருந்தது. அதே நேரத்தில், நிஃப்டி குறியீடு 67.55 புள்ளிகள் குறைந்து 25,082.30 ஆகக் குறைந்தது, முந்தைய நாளின் குறைந்த அளவை விடக் குறைந்து, தொடர்ந்து பலவீனத்தைக் குறிக்கிறது.

பங்குச்சந்தையில் வீழ்ச்சி இருந்தபோதிலும், இந்தியா VIX 1.38% அதிகரித்து 11.98 ஆக உயர்ந்தது, ஆபத்து நிலையை உணர்த்தும் 15 என்ற அளவை எட்டவில்லை.

திங்கட்கிழமை சந்தையில் ஏற்பட்ட தொடர்ச்சியான நான்கு நாள் வீழ்ச்சிகளுக்குப் பிறகு, சாய்ஸ் புரோக்கிங்கின் சுமீத் பாகாடியா ஜூலை 15 செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு பங்குகளை வாங்க பரிந்துரைத்தார். இந்த பரிந்துரை, சந்தையில் தற்போதைய நிலைமையை புரிந்து, முதலீட்டாளர்களுக்கு லாபம் பெறும் வாய்ப்பாக அமையலாம்.

Intraday Stocks to Buy: 2 முக்கிய பங்குகள்.. நிபுணரின் அசத்தலான பரிந்துரை..!!

லாரஸ் லேப்ஸ்:

லாரஸ் லேப்ஸ் (LAURUSLABS) பங்கு தற்போது ரூ.823.85-இல் வர்த்தகம் செய்யப்படுகிறது, கடந்த சில நாட்களில் இதன் வர்த்தக நிலையை பாக்க்கும் போது இது வலுவான முன்னேற்றம் கொண்ட ஒரு விலை அமைப்பை காட்டுகிறது. இந்த பங்கு தனது வரலாற்று உச்ச அளவான ரூ.827.50-ஆல் நெருங்கி வருகிறது, இது ஒரு முக்கிய எதிர்ப்பு நிலையாக மட்டமாக உள்ளது.

இந்த உச்ச அளவை தாண்டி லாரஸ் லேப்ஸ் பங்கு விலை உயர்ந்தால், புதிய முதலீட்டாளர்களும், புதிய முதலீடுகளும் இப்பங்குகள் மீது விழும் இதன் மூலம் லாரஸ் லேப்ஸ் வாங்குவது அதிகரித்து விலை ரூ.882 வரை உயரும் வாய்ப்பு உள்ளது. மேலும் 20, 50, 100 மற்றும் 200 நாள் சராசரி (EMAs) அனைத்தும் மேல்நோக்கி நகர்வதால், குறுகிய முதல் நீண்ட கால அடிப்படையில் வலுவான டிமாண்ட் இருப்பதை குறிக்கிறது.

லாரஸ் லேப்ஸ் பங்கு விலை ரூ.827.50 மட்டத்தை தாண்டினால் இது முக்கிய breakout பாயின்ட் ஆக இருக்கும், இது ரூ.882 என்ற புதிய இலக்கை அடைய உதவும். இருப்பினும், லாரஸ் லேப்ஸ் பங்குகளுக்கு உடனடி ஆதரவு நிலையாக ரூ.800 என்ற அளவீடு உள்ளது.

மேலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இன்டெக்ஸ் (RSI) அளவு 86.29-இல் உள்ளது, இத்தகைய சூழ்நிலையில் லாரஸ் லேப்ஸ் பங்குகளை அதிகம் வாங்கினால் overbought என்ற நிலையை எட்டும். இந்த சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் ஆபத்தை குறைக்க, ரூ.795-இல் stop loss வைத்து முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்ப நிலைகளின் அடிப்படையில், குறுகிய கால வர்த்தகர்களுக்கு ரூ.882 இலக்கை நோக்கி உயரும் லாரஸ் லேப்ஸ் ஒரு சிறந்த முதலீடு வாய்ப்பாக உள்ளது, ஆனால் ரிஸ்க் அளவை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

Intraday Stocks to Buy: 2 முக்கிய பங்குகள்.. நிபுணரின் அசத்தலான பரிந்துரை..!!

JM பைனான்சியல்:

JM பைனான்சியல் (JMFINANCIL) பங்கு தற்போது ரூ.172.18-இல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பங்கின் வரலாற்று உச்ச அளவான ரூ.174-ஆல் நெருங்கி உள்ளது. கடந்த சில வாரங்களில் இந்த பங்குகளின் வர்த்தகம் rounding bottom முறையிலிருந்து பிரேக்அவுட் அடைந்துள்ளது. இந்த பிரேக்அவுட் முதலீடு மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. இதன் மூலம் JM பைனான்சியல் பங்குகள் நீண்ட கால முதலீட்டு போக்கின் தொடக்கத்தையும் காட்டுகிறது.

JM பைனான்சியல் பங்கு 20, 50, 100 மற்றும் 200 நாள் EMAs-க்கு மேலே நிலைத்திருப்பதால், முதலீட்டாளர்களிடையே அதிகரிக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. JM பைனான்சியல் பங்கு ரூ.174 அளவீட்டை தாண்டினால் இதன் விலை ரூ.186 வரை உயரலாம்.

JM பைனான்சியல் பங்கிற்கு உடனடி ஆதரவு நிலையாக ரூ.169 உள்ளது. மேலும் இப்பங்கின் RSI 75.37-இல் உள்ளதால் இப்பங்கு மீது முதலீட்டாளர்களுக்கு வாங்குதற்கு ஆர்வம் அதிகமாக இருப்பதை காட்டுகிறது.

முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் முன் JM பைனான்சியல் பங்கு சார்ந்த ஆபத்தை கட்டுப்படுத்த, ரூ.166 என்ற ஸ்டாப் லாஸ் வைத்து முதலீடு செய்வது உத்தமம். இந்த தொழில்நுட்ப ஆய்வு மற்றும் சந்தை நிலைமைகளின் அடிப்படையில், JM பைனான்சியல் பங்குகள் ரூ.186 என்ற டார்கெட் நோக்கி முதலீடு செய்ய ஒரு உறுதியான வாய்ப்பாக உள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+