Intraday Stocks (July 16): நச்சுன்னு 2 பங்குகள்.. நிபுணரின் அசத்தலான பரிந்துரை..!

நிஃப்டி குறியீடு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சரிந்த பிறகு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 114 புள்ளிகள் அதிகரித்து 25,196 ஆக முடிவடைந்தது. மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் குறியீடுகளும் இரண்டாவது நாளாக தலா 1% உயர்ந்து காணப்பட்டன, இது சந்தை வலுவாக இருப்பதை காட்டுகிறது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 2,475 பங்குகள் உயர்ந்தன, 1,422 பங்குகள் குறைந்தன, மற்றும் 148 பங்குகள் மாற்றமில்லாமல் இருந்தன. வங்கி நிஃப்டி முக்கியமான 57,000 புள்ளிகளை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இந்தியா VIX 4.28% குறைந்து 11.48 ஆக இருந்தது.

Intraday Stocks (July 16): நச்சுன்னு 2 பங்குகள்.. நிபுணரின் அசத்தலான பரிந்துரை..!

இந்த நிலையில் சாய்ஸ் புரோக்கிங்கின் நிர்வாக இயக்குநர் சுமீத் பாகாடியா, ஜூலை 16 தேதி புதன்கிழமை அதாவது இன்று வாங்குவதற்கு ஏற்ற இரண்டு பங்குகளைப் பரிந்துரைத்துள்ளார். இந்தியா VIX 4.17% குறைந்து 11.48 ஆகக் குறைந்ததால் சந்தையின் நிலையற்ற தன்மை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதை இந்த பரிந்துரை வழங்கப்பட்டது.

Thejo Engineering:
தேஜோ இன்ஜினியரிங் தற்போது ரூ. 2339.9க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது மற்றும் ஏப்ரல் மற்றும் ஜூன் 2025 க்கு வர்த்தகத்தில் ஒரு திடமான தளத்தை அமைத்த பிறகு அதன் நீண்டகால சரிவிலிருந்து வெளியேறியுள்ளது. இந்தப் பங்கு சமீபத்தில் அதிகப்படியான வர்த்தகத்தை எதிர்கொண்டு வருகிறது, இதனால் முதலீட்டாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஜனவரியில் பதிவான ரூ.2,130 பிரேக்வுட் அளவு மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் ரூ.2310 வரை சிறிய வீழ்ச்சிகளில் வாங்கலாம் மற்றும் ஆபத்தை திறம்பட நிர்வகிக்க ரூ.2270 இல் ஸ்டாப்-லாஸை வைத்து வாங்கலாம் என சுமீத் பாகாடியா தெரிவித்துள்ளார்.

Manorama Industries:
மனோரமா இண்டஸ்ட்ரீஸ் கிட்டத்தட்ட 5% உயர்ந்த பிறகு, ரூ.1618 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகம் செய்கிறது. இந்தப் பங்கு ரூ.1515 என்ற சப்போரட் லெவல் உள்ளது. இது குறுகிய கால (20 நாள்), நடுத்தர கால (50 நாள்), மற்றும் நீண்ட கால (200 நாள்) EMAs உட்பட முக்கிய சராசரிகளுக்கு மேல் வர்த்தகம் செய்யப்படுகிறது. மேலும் முதலீட்டாளர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய RSI 70.66 நிலைகளில் உள்ளது.

வர்த்தகர்கள் ரூ.1515 க்கு அருகில் உள்ள வலுவான சப்போரட் லெவல்-ஐ கண்காணிக்க வேண்டும், ஏனெனில் இந்த நிலையை விட்டு சரிவது என்பது கவனிக்கப்பட வேன்டிய விஷயமாக உள்ளது. இந்த நிலையில் இப்பகுகளில் முதலீடு செய்வோருக்கு டார்கெட் விலையாக 1717 ரூபாயும், ஸ்டாப் லாஸ் அளவாக 1550 ரூபாயும் நிர்ணயம் செய்து முதலீடு செய்ய சுமீத் பாகாடியா முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைத்துள்ளார்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+