இந்திய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு நேற்றைய வர்த்தகத்தில் 25,212.05-இல் 0.06% உயர்ந்து முடிந்தது, இது நேற்றைய வர்த்தகத்தில் பதிவான குறைவான நிலைகளிலிருந்து வலுவான உயர்வை காட்டுகிறது. நிஃப்டி வங்கி 162 புள்ளிகள் உயர்ந்து 57,168.95-இல் முடிந்தது, மே மாதம் முதல் தொடர்ந்து உயரும் போக்கை கொண்டுள்ளது. இந்த நிலைமை சந்தையில் பதற்றம் இல்லை என்பதை குறிக்கிறது.
இதை உறுதி செய்யும் வகையில் இந்தியா VIX குறியீடு 2.09% குறைந்து 11.24-இல் முடிந்தது, இது முக்கிய 15 புள்ளிகள் என்ற அபத்தான நிலைக்கு கீழேயே உள்ளது.

இந்த நிலையில் சாய்ஸ் புரோகிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுமித் பகடியா வரத்தக சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜூலை 17ஆம் தேதி அதாவது இன்று வாங்கக்கூடிய இரண்டு இன்டராடே பங்குகளை முதலீடு செய்ய பரிந்துரைத்துள்ளார். இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கலாம்.
டாடா பவர்:
டாடா பவர் (TATA POWER) தற்போது ரூ.414.70-இல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. டாடா பவர் பங்குகள் தற்போது ரெய்சிங் பேர்லெல் சேனல் முறையில் நகர்ந்து வருகிறது, இதனால் தொடர்ந்து முன்னேறும் போக்கை காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலையில் டாடா பவர் பங்குகள் ரூ.417 விலைக்கு மேல் நிலைநிறுத்தினால், இது ரூ.450 என்ற உயர்ந்த இலக்கை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்க்த் இண்டெக்ஸ் (RSI) 64.49-இல் மேல்நோக்கி நகர்கிறது, இதனால் இப்பங்குகள் வாங்குவது அதிகமாக உள்ளதை காட்டுகிறது. மேலும், பங்கு 20 நாள், 50 நாள் மற்றும் 200 நாள் எக்ஸ்போனென்சியல் மூவிங் சராசரிகளுக்கு மேலே வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
டாடா பவர் பங்குகளுக்கு உடனடி ஆதரவு நிலையாக ரூ.410-இல் உள்ளது, முதலீட்டாளர்கள் ரூ.400 என்ற ஸ்டாப் லாஸ் அமைத்து ஆபத்தை கட்டுப்படுத்தி முதலீடு செய்யலாம். இந்த தொழில்நுட்ப அமைப்பு மற்றும் சாதகமான RSI, EMA அளவுகள் அனைத்தும் டாடா பவர் மீது முதலீடு செய்ய ஒரு வாய்ப்பை தருகிறது, எனவே முதலீட்டாளர்கள் ரூ.450 என்ற டார்கெட் விலையில் ரூ.400 ஸ்டார் லாஸ் அளவீட்டை வைத்து முதலீடு செய்வது சிறந்தது.
பேங்க் ஆஃப் பரோடா:
பேங்க் ஆஃப் பரோடா பங்குகள் தற்போது ரூ.249.08-இல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது, கடந்த சில நாட்களாக பார்க்கும் போது இப்பங்கு தொடர்ந்து உயர்வுடன் வர்த்தகம் செய்வதை காட்டுகிறது. இப்பங்கின் வர்த்தக அளவுகளையும், விலை நிலையை பார்க்கும் போது பிரேக்அவுட் நிலையை நெருங்கி உள்ளது தெரிகிறது. இந்நிலையில் பேங்க் ஆஃப் பரோடா ரூ.258 என்ற முக்கிய எதிர்ப்பு மட்டத்தை தாண்டினால், இது முன்னேறும் திசையை உறுதி செய்யும்.
டாடா பவர் பங்குகள் 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் எக்ஸ்போனென்சியல் மூவிங் சராசரிகள் அனைத்தும் உயர்வு பாதையில் நகர்கின்றன. ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்க்த் இண்டெக்ஸ் (RSI) 61.39-இல் உள்ளது. டாடா பவர் பங்குகளுக்கு உடனடி ஆதரவு விலையாக ரூ.235 உள்ளது, ஆனால் முதலீட்டாளர்கள் ரூ.240-இல் நிறுத்து-இழப்பு அமைப்பது ஆபத்தை கட்டுப்படுத்த உதவும்.
மொத்தத்தில், இந்த தொழில்நுட்ப அமைப்பு சாதகமான வாய்ப்பை தருகிறது. தற்போதைய விலையில் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும். ரூ.270 என்ற விலை குறுகிய கால இலக்காக வைத்துக்கொண்டு முதலீடு செய்ய முடியும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications