திங்கட்கிழமை இந்த பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. கலக்கலான 2 பங்குகள்..!

கடந்த மூன்று வாரங்களாக பங்குச் சந்தைகள் சரிந்து வருகின்றன, நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டும் வாராந்திர குறைந்தபட்ச அளவான 24,968.40 மற்றும் 81,757.73 இல் வெள்ளிக்கிழமை வர்த்த்கத்தில் முடிவடைந்தன. தற்போது துவங்கியுள்ள காலாண்டு வருவாய் முடிவுகள் வெளியிடும் பருவம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற பெரிய நிறுவனங்களின் இன்றைய ஆரம்பக்கட்ட வர்த்தகத்தில் கவனத்தை ஈர்க்கும் பங்குகளாக உள்ளது. இன்போசிஸ், டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே இந்தியா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பிற முக்கிய நிறுவனங்கள் விரைவில் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன.

சாய்ஸ் புரோக்கிங்கின் சுமீத் பாகாடியா, இந்த வாரம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து தொழிலாளர் சந்தை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளில் தரவுகளை வழங்கும் பல்வேறு அறிகுறிகள் மத்தியில் ஏற்றபடும் சந்தை மாற்றங்களுக்கு நடுவில் திங்கட்கிழமை இரண்டு பங்குகளை வாங்க பரிந்துரைக்கிறார்.

திங்கட்கிழமை இந்த பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. கலக்கலான 2 பங்குகள்..!

டால்மியா பாரத்
டால்மியா பாரத் (DALBHARAT) தற்போது ரூ.2251.80 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது, சமீபத்தில் ரூ.2258 என்ற பல மாத உயர்வை எட்டி தினசரி வர்த்தகத்தில் பிரேக்அவுட் நிலையை எட்டியது. முக்கிய எக்ஸ்போனன்ஷியல் மூவிங் ஆவரேஜ்கள் (20, 50, 100, மற்றும் 200 EMA)க்கு மேல் பங்கின் விலை வலுவான வளர்ச்சி போக்கைக் குறிக்கிறது. மேலும் சமீபத்திய பிரேக்அவுட் நிலை இப்பங்கின் ஒரு நடுத்தர கால அல்லது நீண்ட கால ஏற்றப் போக்கு இருக்கும் என்பதை காட்டுகிறது.

வர்த்தகர்கள் DALBHARAT-ஐ தற்போதைய நிலைகளில் ரூ,2172 ஸ்டாப்-லாஸ் மற்றும் குறுகிய காலத்தில் ரூ,2410 இலக்குடன் நுழையலாம். ரிலேட்டிவ் ஸ்ட்ரெந்த் இன்டெக்ஸ் (RSI) 66.82 ஆக உள்ளது.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (CHENNPETRO) ரூ,779.40 இல் வர்த்தகம் செய்யப்படுகிறது, இப்பங்கின் வர்த்தகத்தை பார்க்கும் போது அதிகபட்ச உயர்வு - அதிகபட்ச குறைவு வடிவத்தைப் உருவாக்கி ஒரு ஏற்றப் போக்கை பிரதிபலிக்கிறது. மேலும் இப்பங்கு அதன் எதிர்ப்பு மண்டலமான ரூ.782 க்கு மேல் பிரேக்அவுட் ஆகி புதிய உயர்வை எட்டும் அளவுக்கு ஒரு வலுவான ஏற்றப் போக்கைக் குறிக்கிறது.

பங்கு 20-நாள் எக்ஸ்போனன்ஷியல் மூவிங் சராசரியிலிருந்து உறுதியான ஆதரவைப் பெற்றுள்ளது மற்றும் அனைத்து முக்கிய EMA களுக்கும் (20, 50, 100, மற்றும் 200) மேல் வர்த்தகம் செய்கிறது, இதன் மூலம் அதன் தொடர் ஏற்ற போக்கை காட்டுகிறது. மேலும் இப்பங்கிற்கு அதன் உடனடி எதிர்ப்பு நிலை ரூ.800 இல் உள்ளது. தற்போதை வர்த்தக போக்கு தொடர்ந்தால் குறுகிய கால வளர்ச்சியில் ரூ.840 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் CHENNPETRO-க்கான உடனடி ஆதரவு ரூ,760 இல் அமைந்துள்ளது, RSI 67.56 ஆக உள்ளது. முதலீட்டாளர்கள் எதிர்பாராத சந்தை சரிவுகளை சமாளிக்க ரூ.752 இல் ஒரு ஸ்டாப்-லாஸ் வைத்து முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+