இந்திய பங்குச் சந்தை புதன்கிழமை வர்த்தகத்தில் சிறிய அளவிலான மீட்சியை கண்ட நிலையில், அமெரிக்கா இந்திய இறக்குமதிகளுக்கான 25% வரி ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வருவதால் சந்தையில் இன்று பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
நிஃப்டி நேற்றைய வர்த்தகத்தில் 24,855.05 புள்ளிகளில் 0.14% உயர்ந்து முடிவடைந்து, இரண்டாவது நாளாக சிறிய அளவிலான உயர்வை பதிவு செய்து வருகிறது. இதேபோல், நிஃப்டி வங்கி 56,150.70-இல் முடிந்து, 0.13% குறைந்து தொடர் கவலையை ஏற்படுத்துகிறது.

மேலும் இந்திய VIX 2.78% குறைந்து 11.20-இல் முடிந்து, 13 என்ற சைகாலஜிக்கல் எல்லையை கடக்காமல் நிலையாக உள்ளது, இதன் மூலம் பங்குச்சந்தையில் பதற்றம் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது.
இன்றைய வர்த்தகம் அமெரிக்காவின் வரி விதிப்பு, பெடரல் ரிசர்வ்-ன் வட்டி முடிவுகள், ஐக்கிய நாடுகளின் Q2 GDP மதிப்பீடுகள் மற்றும் விவசாயம் அல்லாமல வேலைவாய்ப்பு அறிக்கை ஆகியவை வெளியாக உள்ளதால், சந்தை தடுமாற்றத்தை சந்திக்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் 25% வரி அறிவிப்பு பின்னர், சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுமித் பகடியா, ஜூலை 31, 2025 வியாழக்கிழமை வர்த்தகத்தில் 2 பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளார்.
நெட்வெப் டெக்னாலஜீஸ்:
முதல் பங்கு நெட்வெப் டெக்னாலஜீஸ் இந்தியா, இது தற்போது ரூ.2023-இல் வர்த்தகம் செய்யப்பட்டு, வலுவான முன்னேறும் திசையில் உள்ளது. இந்த பங்கு symmetrical triangle pattern-ல் பிரேக்அவுட் ஆகி கீழ்மட்டத்தில் இருந்து உயர்ந்துள்ளது. இதன் மூலம் புதிய முதலீட்டுகள் இந்நிறுவன பங்குகளில் அதிகரித்துள்ளது.
இந்த பங்கிற்கு 200 வார எக்ஸ்போனென்சியல் நகரும் சராசரி (EMA) அருகில் உறுதியான ஆதரவை பெற்றுள்ளது மற்றும் 20 நாள், 50 நாள், 200 நாள் EMA-களுக்கு மேல் வணிகம் செய்கிறது.
நெட்வெப் டெக்னாலஜீஸ் சமீபத்தில் ரூ.2000 என்ற முக்கிய எதிர்ப்பு நிலையை தாண்டியது மூலம் புல்லிஷ் ஏங்குல்ஃபிங் கேண்டில்ஸ்டிக் வடிவம் உருவாகியது மூலம் முதலீட்டு சந்தையில் இந்த பங்குகளுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகியுள்ளது தெரிகிறது. இந்த நிலை தொடர்ந்தால், பங்கு அடுத்த சில நாட்களில் ரூ.2165 என்ற இலக்கை அடைய வாய்ப்புள்ளது.
இப்பங்கிற்கு உடனடி ஆதரவு ரூ.2000-இல் உள்ளது, ரூ.2165 டார்கெட் விலையுடன், ரிஸ்க்-ஐ கட்டுப்பட்டுத்த ரூ.1952 என்ற stop-loss வைத்து முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்க்த் இன்டெக்ஸ் (RSI) தற்போது 61.37-இல் உயர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்ப அமைப்பு, சிறிய கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்குகிறது.
PI இண்டஸ்ட்ரீஸ்:
இரண்டாவது பங்கு PI இண்டஸ்ட்ரீஸ், தற்போது ரூ.4324.20-இல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பங்கு தினசரி வர்த்தகத்தின் அடிப்படைில் புல்லிஷ் கேண்டில்ஸ்டிக் வடிவத்தை உருவாக்கி, ரூ.4275 என்ற முக்கிய எதிர்ப்பு நிலையை தாண்டி பிரேக்அவுட் ஆகியுள்ளது.
இந்த பங்கை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யும் போது, இப்பங்கு 20, 50, 100 மற்றும் 200 நாள் EMA-களுக்கு மேலே வணிகம் செய்கிறது, இதன் மூலம் இப்பங்கு சிறு மற்றும் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதாக விளங்குகிறது.
PI இண்டஸ்ட்ரீஸின் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்க்த் இன்டெக்ஸ் (RSI) 66.11-இல் உயர்ந்து வருகிறது. மேலும் இப்பங்கு தொடர்ந்து ரூ.4350 என்ற தனது உடனடி எதிர்ப்பு நிலைய தாண்டி வர்த்தகம் செய்து வரும் வேளையில், அடுத்த சில நாட்களில் ரூ.4627 என்ற இலக்கை நோக்கி செல்லலாம்.
தற்போதைய சூழ்நிலைகளில் நீண்ட கால அடிப்படையில் பங்குகளை வாங்கலாம் என சுமித் பகாடியா தெரிவித்துள்ளார். மேலும் இப்பங்கில் முதலீடு செய்வோர் ஆபத்து காரணிகளை களைய ரூ.4172 என்ற ஸ்டாப் லாஸ் வைத்து முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications