Intraday Stocks: முத்து முத்தா 2 பங்கு.. பங்குச்சந்தை நிபுணரின் பரிந்துரை..!

இந்திய பங்குச் சந்தை ஜூலை 22 அன்று ஏற்ற இறக்கமான வர்த்தகத்தைக் கண்டு, இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 13.53 புள்ளிகள் குறைந்து 82,186.81 புள்ளிகளிலும், நிஃப்டி 29.80 புள்ளிகள் சரிந்து 25,060.90 புள்ளிகளிலும் முடிவடைந்தன. நேற்றைய வர்த்தகத்தில் மொத்தம் 988 பங்குகள் உயர்ந்தன, ஆனால் 1,492 பங்குகள் சரிவைச் சந்தித்தன, இது சந்தையில் விற்பனை அழுத்தம் அனைத்து துறைகளிலும் நிலவியதைக் காட்டுகிறது. India VIX குறியீடு 4.02% குறைந்து 10.7525 ஆக இருந்தது, அதேபோல் 15 என்ற ஆபத்தான நிலையை தாண்டவில்லை.

முதலீட்டாளர்கள், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர், ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கான காலக்கெடு உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கிகள், பார்மா, ஊடகம், மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளின் குறியீடுகள் 0.4% முதல் 2% வரை சரிவைக் கண்டன.

இந்தச் சூழலில், சந்தையில் முதலீட்டுக்கு ஏற்ற பங்குகளைப் பற்றி ஆய்வு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுமீத் பகாடியா, ஜூலை 23, புதன்கிழமை அன்று இரண்டு பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளார். இந்தப் பங்குகள் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகும்.

Intraday Stocks: முத்து முத்தா 2 பங்கு.. பங்குச்சந்தை நிபுணரின் பரிந்துரை..!

பேடிஎம் பங்குகள்:
ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பேடிஎம்) பங்கு தற்போது ரூ.1,051.05 இல் வர்த்தகமாகிறது. இந்தப் பங்கு தொடர்ச்சியாக உயர்ந்து வலுவான வளர்ச்சி பாதையை வெளிப்படுத்துகிறது. இது ஒரு ரவுண்டிங் பாட்டம் (Rounding Bottom) முறையில் பிரேக்வுட்-ஐ உறுதி செய்து. இந்த பிரேக்அவுட், 52 வார உச்சமான ரூ.1,060ஐ எட்டியதன் மூலமும், தொடர்ந்து அதிகளவிலான பங்குகள் வர்த்தகம் செய்யப்படுவதும் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பங்கின் விலை, முக்கிய எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ்களுக்கு மேலாக உள்ளது, இது குறுகிய மற்றும் நீண்ட கால போக்குகளின் வலுவான வளர்ச்சி பாதையை மீண்டும் உறுதி செய்கிறது. பேடிஎம் பங்குகளுக்கு உடனடி எதிர்ப்பு நிலை ரூ.1,060 இல் உள்ளது, இந்த நிலை உடைந்தால் குறுகிய கால இலக்காக ரூ.1,125ஐ எட்டலாம். கீழ்நோக்கி, உடனடி ஆதரவு ரூ.1,030 இல் உள்ளது.

மேலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இன்டெக்ஸ் (RSI) தற்போது 78.05 இல் உள்ளது, இது பேடிஎம் பங்குகள் அதிகளவில் வாங்கப்படுவதை காட்டுகிறது. சந்தை சரிவுகளிலிருந்து பாதுகாக்க, ரூ.1,014 இல் ஸ்டாப்-லாஸ் வைத்து முதலீடு செய்வது உத்தமம். மொத்தத்தில், பேடிஎம் பங்கு ஒரு சிறப்பான தொழில்நுட்ப அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1,125 இலக்கை நோக்கி முதலீடு செய்யலாம்.

அம்புஜா சிமெண்ட்ஸ்:
நேற்றைய வர்த்தகத்தில் சிமெண்ட் துறை பங்குகள் அனைத்து உயர்வுடன் காணப்பட்ட நிலையில், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு தற்போது ரூ 620.55 இல் வர்த்தகமாகிறது. இந்தப் பங்கு குறுகிய காலத்தில் மேல்நோக்கிய போக்கைக் காட்டுகிறது, ஆனால் ஒரு பெரிய ரைசிங் வெட்ஜ் (Rising Wedge) முறை உருவாகி வருகிறது, இது பொதுவாக பங்குகளில் பெரிய மாற்றம் இல்லாமல் போகும் நிலை அல்லது பங்கு விலை ஒருங்கிணைப்பு நிலையை குறிக்கிறது.

இந்த பங்கு சமீபத்தில் வெட்ஜின் மேல் எல்லையை உடைத்து, ரூ.624.95 உச்சத்தைத் தொட்டு, தற்போது ரூ.620.55 இல் வர்த்தகமாகிறது. இந்த முறிவு வலுவாகத் தோன்றினாலும், ரைசிங் வெட்ஜின் இயல்பு காரணமாக எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். பங்கின் விலை, 20, 50, 100, மற்றும் 200 நாள் எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ்களுக்கு மேலாக உள்ளது, இவை அனைத்தும் மேல்நோக்கி சாய்வாக உள்ளன, இது நிலவும் போக்கின் வலிமையை உறுதிப்படுத்துகிறது.

அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு விலை ரூ.637க்கு மேல் உறுதியான முடிவை எட்டினால், அடுத்த கட்ட உயர்வுக்கு இது ஒரு உந்துதலாக அமையும், இது குறுகிய காலத்தில் ரூ.665 இலக்கை எட்ட வழிவகுக்கும். இப்பங்கிற்கு கீழ்நோக்கி, உடனடி ஆதரவு ரூ.610 இல் உள்ளது.

அம்புஜா சிமெண்ட்ஸ்-ன் RSI அளவு தற்போது 77.29 இல் உள்ளது, இது பங்கு அதிகமாக வாங்கப்படும் வேகத்தைக் காட்டுகிறது, ஆனால் இது overbought என்ற நிலையை நெருங்குவதையும் குறிக்கிறது. திடீர் சந்தை திருத்தங்கள் அல்லது லாப பதிவுக்கு எதிராக, ரூ.598 இல் ஸ்டாப்-லாஸ் வைப்பது உத்தமம். இந்த நிலையில் மேலும் முதலீட்டாளர்கள் சிறிய சரிவுகளில் முதலீடு செய்யலாம் அல்லது உறுதியான பிரேக்அவுட்-க்கு காத்திருக்கலாம், ரூ.665 இலக்கை நோக்கி முன்னேறலாம்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+