இன்ட்ராடே வர்த்தகத்துக்கு ஏற்ற சூப்பரான 4 பங்குகள்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் தொடர்ந்து 7வது வர்த்தக தினமாக இன்றும் பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் உற்சாமாக தொடங்கியது ஆனால் மாலையில் வர்த்தகம் முடியும் போது வெறும் 30 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது.

இன்று காலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் தொடங்கியது. பங்குச் சந்தையில் இன்று இன்ட்ராடே வர்த்தகத்தில் நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ள ரூ.100க்கும் குறைவான 4 நிறுவன பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இன்ட்ராடே வர்த்தகத்துக்கு ஏற்ற சூப்பரான 4 பங்குகள்

இன்ட்ராடே வர்த்தகத்தில், என்எச்பிசி, கனரா வங்கி, என்பிசிசி மற்றும் மோர்பென் லேபாரட்டீஸ் ஆகிய 4 நிறுவன பங்குகளும் நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். அதேசமயம், இந்த பங்குகளில் முதலீடு செய்யும்போது, கட்டாயம் ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹென்செக்ஸ் செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சி ஏவிபி மகேஷ் எம் ஓஜா கூறுகையில், மத்திய அரசுக்கு சொந்தமான நீர்மின் உற்பத்தி நிறுவனமான என்எச்பிசி லிமிடெட். இந்நிறுவன பங்குகளை ரூ.83 முதல் 84 வரையிலான விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.91 ஆகும். அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.81 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.83.62ல் முடிவுற்றது.

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி பங்குகளை ரூ.91-91.50 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலைகள் ரூ.94, ரூ.97,ரூ.100 மற்றும் ரூ.105 ஆகும். அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.88 ஆகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.91.32ல் முடிவுற்றது.

எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்டின் நிறுவனர் சுகந்தா சச்தேவா கூறுகையில், சிவில் கட்டுமான நிறுவனமான என்பிசிசி (இந்தியா) லிமிடெட் பங்குகளை ரூ.84.70 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் விலை இலக்கு விலை ரூ.89.50ஆக கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.82ஆகும். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.85.35ல் முடிவுற்றது.

லட்சுமிஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் செக்யூரிட்டீஸின் ரிசர்ச் பிரிவு தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறுகையில், மருந்து துறையை சேர்ந்த மோர்பென் லேபாரட்டீஸ் பங்கை ரூ.51.90 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.56 ஆகும். அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.50.50என கணிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.51.72ல் முடிவுற்றது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+