திங்கட்கிழமையான இன்று உலகளாவிய வர்த்தகப் போர் ஏற்படும் அச்சம் காரணமாக வால் ஸ்ட்ரீட் எதிர்கால பங்குகள் கடுமையாக வீழ்ந்தன. இதனால், ஆசிய பங்கு சந்தைகளும் பெரிதும் சரிவை கண்டன. மேலும், மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா வட்டி விகிதங்களை மே மாதத்திலேயே குறைக்கும் வாய்ப்பு இருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.
இருப்பினும், இந்த ஆண்டு அமெரிக்க வட்டி விகிதங்கள் கால் சதவீதமாக ஐந்து முறை குறைக்கப்படும் என எதிர்பார்த்து, எதிர்கால சந்தைகள் விரைவாக நகர்ந்தன. இதன் விளைவாக, அமெரிக்க கடன் பத்திர வருவாய்கள் (Treasury yields)மிகவும் குறைந்தது மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பும் பலவீனமடைந்தது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தங்களது விரிவான வரி திட்டங்களை வாபஸ் பெற எந்த அறிகுறிகளையும் காட்டாததே இந்த சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அமெரிக்க பொருட்கள் மீது விதித்த பதிலடி வரிகள் குறித்து, எங்கள் சந்தைகளே பதில் கூறிவிட்டன என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிருபர்களிடம் பேசும்போது, சந்தைகள் தங்களது மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என கூறினார். மேலும், அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை சரியாக்கப்படும் வரை சீனாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்வதில்லை என்றும் தெரிவித்தார். டிரில்லியன் கணக்கில் செல்வ இழப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் கடுமையான தாக்கம், டிரம்ப் தனது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வைக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால் டிரம்ப் தனது கருத்தை வெளிப்படுத்திய பிறகு, சந்தைகளில் இருந்த முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்தது. அந்த நம்பிக்கையின் குறைபாடு, சந்தை நிலவரத்தையும் நேரடியாக பாதித்தது, பங்குகள் வீழ்ந்தன, முதலீடுகள் குறைந்தது, சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் தொடர்ந்து அதே மாதிரியாகவே நீடித்தால், தற்போது வளர்ச்சியடைந்து வரும் அமெரிக்கா மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தைக் கூட மந்தநிலைக்கு தள்ளக்கூடும் அளவிற்கு தாக்கம் ஏற்படும் என்று JPMorgan நிறுவனத்தின் பொருளாதாரத் தலைவரான ப்ரூஸ் காஸ்மேன் (Bruce Kasman) கூறினார். இதன் காரணமாக மந்தநிலை ஏற்படும் அபாயம் 60% ஆக இருக்கும் என்றும் அவர் மதிப்பீடு செய்துள்ளார்.
மேலும், முதலாவது அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதக் குறைப்பு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் ஆனால் இப்போது, ஜனவரி வரை நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும் விகிதம் குறைக்கப்படும் என நாங்கள் நினைக்கிறோம். இதன் மூலம், அமெரிக்காவின் வட்டி விகித இலக்குக் வரம்பின் உச்சத்தை 3.0% ஆகக் குறைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நிலையற்ற வர்த்தக சூழலில், S&P( Standard & Poor's) 500 எதிர்கால பங்குகள் 4.31% வீழ்ந்தன, அதே நேரத்தில், நாஸ்டாக் (Nasdaq) எதிர்கால பங்குகளும் 5.45% வீழ்ந்தன. இந்த வீழ்ச்சிகள், கடந்த வாரத்தில் ஏற்பட்ட சுமார் 6 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான சந்தை இழப்புக்கு மேலாகச் சேர்க்கப்பட்டன. இதேபோல், ஜப்பானின் Nikkei குறியீடு 7.8% வீழ்ந்தது, இது 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கடைசியாகக் காணப்பட்ட மிகக் குறைந்த அளவை எட்டியது. அதே நேரத்தில் தென் கொரியா 4.6% சரிந்தது.
அதாவது, உலகளாவிய வளர்ச்சியில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் இழப்புகளுக்குப் பிறகு, எரிபொருள் விலைகள் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. இது எண்ணெய் உற்பத்தி மற்றும் நுகர்வு நாடுகளின் பொருளாதாரத்திலும், பங்கு சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில், பிரெண்ட் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.12 டாலர் குறைந்து 63.46 டாலர் ஆகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.05 டாலர் குறைந்து 59.94 டாலர் ஆகவும் இருந்தது.
பணவீக்கம், பொருளாதார மந்தம், பங்கு சந்தை வீழ்ச்சி போன்ற பதட்டமான சூழ்நிலைகளில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக நம்பும் முதலீட்டுகள் காரணமாக, டிரெஷரி ஃப்யூச்சர்ஸ் (Treasury Futures) ஒரு முழுப் புள்ளி உயர்ந்தது. இது ஆசிய வர்த்தகத்தில் மிக அரிதாக நிகழும் ஒரு மாற்றம் ஆகும். மேலும், அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் மேலும் ஒரு கால் புள்ளி (0.25%) வட்டி விகிதத்தை குறைக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததால், Fed Fund Futures-ன் விலையும் உயர்ந்தது.
சந்தைகள் மே மாதத்திற்குள் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்க 63% வாய்ப்பு இருப்பதாகக் குறிக்கின்றன. இருப்பினும், வட்டி விகிதம் குறைப்பதில் மத்திய வங்கி அவசரத்தில் இல்லை என்று மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவுல் தெரிவித்துள்ளார். ஆபத்தான சொத்துகளிலிருந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளுக்கு இடமாற்றம் செய்யும் சூழலில், 10 ஆண்டுகளுக்கான அமெரிக்க அரசுத் தவணைப் பத்திரங்களின் (Treasuries) வருமான விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் (0.10%) குறைந்து, 3.897% ஆக இருந்தது.
பணவீக்கத்தை பொருட்படுத்தாதீர்கள்: அமெரிக்க மத்திய வங்கியின் அணுகுமுறை காரணமாக, அமெரிக்க டாலர் பாதுகாப்பான முதலீடான ஜப்பான் யென் மேலும் 0.9% வீழ்ச்சி அடைந்து, 1 டாலர் = 145.59 யென் ஆக குறைந்தது.மறுபுறம் யூரோ மதிப்பு 1.0955 டாலராகவும் நிலையாக இருந்தது, அமெரிக்க டாலர், ஸ்விஸ் ஃபிராங்கிடம் 1.2% வீழ்ச்சி அடைந்து 0.8501 ஆக குறைந்தது, அதே நேரத்தில், வர்த்தகத்துக்கு அதிகம் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய டாலரும் மேலும் 0.7% சரிந்தது.
முதலீட்டாளர்கள், வரிகளால் ஏற்படும் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயத்தை விட, மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கும் என்றும் பந்தயம் கட்டினர். இந்த வார இறுதியில் வெளியிடப்படவுள்ள அமெரிக்க நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) மார்ச் மாதத்துக்காக மேலும் 0.3% உயர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுங்க வரிகள் (Tariffs) உணவுப் பொருட்கள் முதல் கார்கள் வரை அனைத்தற்கும் விலையை கூடிய விரைவில் பெரிய அளவில் உயர்த்தும் என நிபுணர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அதிகரிக்கின்ற செலவுகள், நிறுவனங்களின் லாப விகிதங்களில் அழுத்தம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, சில முக்கிய வங்கிகள் வெள்ளிக்கிழமையன்று தங்களின் வருமான அறிக்கைகளை வெளியிட உள்ள நிலையில்,
வருமான அறிக்கை சீசன் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், "வரவுள்ள காலாண்டு வருமானக் கூட்டங்களில், இயல்பைவிட குறைந்த நிறுவனங்கள் மட்டுமே 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டும், முழு ஆண்டிற்குமான வருமானத் திட்டத் தகவலையும் (forward guidance) வழங்கும் என்று எங்களுக்குத் தோன்றுகிறது," என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவன நிபுணர்கள் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகரிக்கும் சுங்க வரிகள் பல நிறுவனங்களை, விலைகளை உயர்த்தவோ அல்லது குறைந்த லாப விகிதங்களை ஏற்கவோ கட்டாயப்படுத்தும், என்றும் "வரவுள்ள காலாண்டுகளில், பொதுவான எதிர்பார்ப்புகளுக்கேற்ப இருக்கும் லாப விகிதக் கணிப்புகளில் எதிர்மறையான திருத்தங்கள் வருமென நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் அந்த நிபுணர்கள் தெரிவித்தனர்.
தங்கமும் இந்த விற்பனை அழுத்தத்தில் இருந்து விலக முடியவில்லை. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.7% குறைந்து $3,013 ஆக வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி, முதலீட்டாளர்கள் மற்ற சொத்துக்களின் இழப்புகள் மற்றும் லாப வரம்பு அழைப்புகளை ஈடுகட்ட தங்களால் இயன்ற இடத்தில் லாபத்தை எடுத்துக்கொள்கிறார்களா என்று டீலர்களை யோசிக்க வைத்தது, இது சுயமாகத் தீவிரமடையும் "fire sale" நிலைக்குப் போகக்கூடிய சூழ்நிலையாக இருக்கலாம் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications