இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இன்று கூட சென்செக்ஸ் மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பு வரை ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வந்தது. ஆனால் ஆர்பிஐ-ன் வட்டி விகித முடிவுகள் வெளியான பின் தொடர்ந்து சரியத் தொடங்கியது.
இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 433 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமானது. வங்கி துறை சார் பங்குகள் இன்றைய இறக்கத்துக்கு பெரிய அளவில் வலு சேர்த்தன. இன்று சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கியதற்கு காரணம் ஆர்பிஐ வட்டி விகித அறிவிப்புகள் மற்றும் ஜிடிபி கணிப்புகள் தான் என்பதை ரெலிகேர் தரகு நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித் மிஸ்ராவும் உறுதி செய்கிறார்.

மத்திய ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதார ஜிடிபியைப் பற்றிப் பேசும் போது, இந்தியாவின் இன்னும் உள் நாட்டுத் தேவை அதிகரிக்கவே இல்லை. இன்னும் பலவீனமாகவே இருக்கிறது. அதோடு இந்தியாவில் வியாபார எதிர்பார்ப்பு இன்டெக்ஸில் மத்திய ரிசர்வ் வங்கியின் தொழில் துறை கணிப்பு சர்வேயிலும் நெகட்டிவ்வாகவே இருக்கிறது. அதாவது தொழில் துறையினர் எந்த ஒரு விரிவாக்கப் பணிகளையும் மேற்கொள்ளவே இல்லை என்பதை மேலே சொன்ன சர்வேயும் உறுதி செய்கிறது.
அதோடு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அல்லது மதிப்பு கூட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வியாபாரமும் சர்வதேச காரணிகளால் குறிப்பாக அமெரிக்க சீன வர்த்தகப் போராலும், உலகப் பொருளாதார மந்த நிலையாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படியாக மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த செய்திகள் அனைத்தும் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. ஆக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் சென்செக்ஸ் சுமாராக 1,300 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. இதனால் சென்செக்ஸில் வியாபாரம் செய்யும் முதலீட்டாளர்கள் முதல் வர்த்தகர்கள் வரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்து இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications