மும்பை: நடப்பு நிதியாண்டில் இந்திய பங்கு சந்தையில் பொதுப் பங்கு வெளியீடு என்பது, கடந்த ஆண்டினை காட்டிலும் கணிசமாக சரிவினைக் கண்டுள்ளது.
இதன் மூலம் 52,116 கோடி ரூபாய் நிதியினை மட்டுமே திரட்டியுள்ளது. இதே முந்தைய நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக 1,11,547 கோடி ரூபாயாக இருந்தது.
எவ்வளவு நிறுவனங்கள் வெளியீடு?
பிரைம் டேட்டாபேஸ் அறிக்கையின் படி, 2023ம் நிதியாண்டில் 37 நிறுவனங்கள் மெயின் போர்டின் வெளியீடு செய்துள்ளன. இதே 2021 - 22ம் நிதியாண்டில் 53 நிறுவனங்கள் வெளியீடு செய்யப்பட்டன. ஆக இதிலும் கடந்த ஆண்டினை காட்டிலும் குறைவு எனலாம்.
மொத்த நிதி திரட்டல்
பிரைம் டேட்டாபேஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பிரணவ் ஹல்டியா, 2023 நிதியாண்டில் திரட்டப்பட்ட மொத்த தொகையில் 39% தொகையில் 20,557 கோடி ரூபாயாக, எல்ஐசி மட்டும் இருந்தது.
ஆக மொத்தம் எல்ஐசி-யும் சேர்த்து 31,559 கோடி ரூபாயாக உள்ளது. எப்படியிருப்பினும் நிதியாண்டில் மூன்றாவது ஆண்டாக அதிகபட்சமாக நிதி திரட்டப்பட்டுள்ளது.
எதன் மூலம் எவ்வளவு?
2022ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த பொதுப் பங்கு வெளியீடு 56% கூறைந்து, 76,076 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது 2022ம் நிதியாண்டில் இருந்து 1,73,728 கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு ஆண்டில் ஐபிஓ-க்கள் மூலம் 54,344 கோடி ரூபாய் (எஸ் எம் இ வெளியீடு உள்பட) மூலதன சந்தைகள் மூலம் மொத்த நிதி திரட்டல் 85,021 கோடி ரூபாயாக இருந்தது. இதில் 11,231 கோடி ரூபாய் ஆஃபர் பார் சேல் மூலமாக திரட்டப்பட்டது. இதே QIP/invITs/REITs மூலம் 1166 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. ஆக மொத்தமாக ஈக்விட்டி மூலமாக 76,076 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பெட்டர்
இதே பொது பத்திரங்கள் மூலம் 8944 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. ஆக ஐபிஓ மற்றும் பத்திரங்கள் மூலம் 85,021 கோடி ரூபாய் நிதியானது திரட்டப்பட்டுள்ளது.
முந்தைய நிதியாண்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, சந்தையின் செயல்திறன் என்பது சிறப்பாக இருந்தது. 2021ல் இதுவரை இல்லாத அளவாக மொத்த நிதி திரட்டல் என்பது 2,00,812 கோடி ரூபாயாக இருந்தது.


Click it and Unblock the Notifications