11 ஐபிஓ 14 லிஸ்டிங் வெயிட்டிங்.. இந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு அடிக்கப்போகும் யோகம்..!!

உள்நாட்டு பங்குச் சந்தையில் இந்த வாரம் வரிசையாக ஐபிஓக்கள் வரவுள்ளன. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு வகையான திருவிழா என்றே சொல்லலாம். ஆம், முதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிப்பதற்கான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரத்தில் மட்டும் 14 நிறுவனங்களின் ஐபிஓக்கள் பட்டியலிடப்படுகின்றன. மேலும் 11 நிறுவனங்களின் ஐபிஓ சந்தாவிற்கு திறக்கப்படுகின்றன. நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகவே இருக்கும் என்று சொல்லலாம்.

ஐபிஓக்களை பொருத்தவரையில்,வங்கி சாரா நிதி நிறுவனமான மன்பா ஃபைனான்ஸ் ஐபிஓ, ரூ.151 கோடி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஐபிஓ செப்டம்பர் 23 இன்று சந்தாவிற்கு திறக்கப்படும். இது செப்டம்பர் 25 வரை திறந்திருக்கும். இந்த ஐபிஓவிற்கு ஒரு பங்குக்கு ரூ.114-120 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் ரூ.45.25 கோடி திரட்டியுள்ளது. நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.1.25 கோடி முகமதிப்பு கொண்ட ஈக்விட்டி பங்குகளை வெளியிடும்.

11 ஐபிஓ 14 லிஸ்டிங் வெயிட்டிங்.. இந்த வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு அடிக்கப்போகும் யோகம்..!!

KRN ஹீட் எக்ஸ்சேஞ்சர் மற்றும் ரெபிரிஸூரேஷன் ஐபிஓ
அடுத்ததாக,கேஆர்என் ஹீட் எக்ஸ்சேஞ்சர் மற்றும் ரெபிரிஸூரேஷன் நிறுவனமும் ரூ.342 கோடி திரட்டும் நோக்கத்துடன் ஐபிஓவைத் திறக்கிறது. ஐபிஓ செப்டம்பர் 25 முதல் சந்தாவிற்கு திறக்கப்படும். இது செப்டம்பர் 27 அன்று முடிவடையும். ஒரு பங்குக்கு ரூ.209-220 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வோல் 3D இந்தியா ஐபிஓ
வோல் 3D இந்தியா ஐபிஓ செப்டம்பர் 23 திங்கள் முதல் சந்தாவுக்குத் திறக்கப்பட்டு செப்டம்பர் 25 அன்று முடிவடையும். இந்த ஐபிஓவில் ஒரு பங்குக்கு ரூ.142-150 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரேபிட் வால்வ்ஸ் ஐபிஓ
ரேபிட் வால்வ்ஸ் ஐபிஓ
இந்த நிறுவனத்தின் ஐபிஓ செப்டம்பர் 23-25க்குள் சந்தாவிற்காக திறக்கப்படும். இதன் மூலம் ரூ.30.41 கோடி ரூபாய் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு பங்குக்கு ரூ.210 - 222 விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இவை தவிர, டெக்கரா இன்ஜினியரிங், யுனிலெக்ஸ் கலர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் மற்றும் திங்கிங் ஹட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சொலியூஷன் ஆகியவற்றின் ஐபிஓக்கள் செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்குகின்றன. அத்துடன் சாஜ் ஹோட்டல் ஐபிஓ செப்டம்பர் 27 அன்று தொடங்குகிறது.

14 நிறுவனங்கள் பட்டியலிடப்படும்
வெஸ்டர்ன் கேரியர்ஸ் இந்தியா, ஆர்கேட் டெவலப்பர்ஸ் மற்றும் நார்தர்ன் ஏஆர்சி கேபிடல் ஆகியவற்றின் ஐபிஓக்கள் கடந்த வாரம் மெயின்போர்டு பிரிவில் திறக்கப்பட்டன. இவை செப்டம்பர் 24 அன்று சந்தைகளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. அதேபோல், எஸ்எம்இ பிரிவில், பாப்புலர் பவுண்டேஷன், டெக்கன் ட்ரன்ஸ்கான் லீசிங், பீலாட்ரோ, என்விரோ டெக் சிஸ்டம்ஸ் மற்றும் ஓசெல் டிவைசஸ் ஐபிஓக்கள் செப்டம்பர் 24 அன்று பட்டியலிடப்படும். அதேபோல், பாரமவுண்ட் ஸ்பெஷாலிட்டி ஃபோர்கிங்ஸின் ஐபிஓ செப்டம்பர் 25 அன்று சந்தைக்கு வருகிறது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+