முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..45% பிரீமியத்தில் பட்டியல்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

சமீபத்திய காலமாக பங்கு சந்தையில் பல நிறுவனங்கள் புதிதாக நுழைந்து வருகின்றன. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளாக பார்க்கப்படுகிறது.

பேடிஎம்-ன் வருகைக்கு பிறகு இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்து வந்தது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பல நிறுவனங்களும் முதல் நாளிலேயே அட்டகாசமான லாபத்தினை கொடுத்து வருகின்றன.

இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் சிறு முதலீட்டாளர்களும், பொதுப் பங்கு வெளியீட்டிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் தற்போது டேட்டா பேட்டர்ன்ஸ் நிறுவனம் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.

டேட்டா பேட்டர்ன்ஸ்

டேட்டா பேட்டர்ன்ஸ்

இந்த நிறுவனம் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிடெட், பாதுகாப்பு துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுடன், வின்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுடன் டேட்டா பேட்டர்ன்ஸ் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

பட்டியல் விலை என்ன?

பட்டியல் விலை என்ன?

இந்த நிறுவனம் இன்று பங்கு சந்தையில் 45% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. என்.எஸ்.இயில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 856.05 ரூபாயாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விலை 585 ரூபாயாகும். இதே பிஎஸ்இ-ல் இந்த பங்கின் விலையானது 864 ரூபாயாக பங்கு சந்தையில் பட்டியலிடப்படுள்ளது.

நிபுணர்களின் கருத்து என்ன?

நிபுணர்களின் கருத்து என்ன?


மிக வலுவான லாபத்துடன் முதல் நாளே பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இந்த பங்கு இன்னும் நல்ல ஏற்றத்தினை காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கேப்பிட்டல் வயா நிறுவனம் இந்த பங்கின் விலையானது அடுத்த சில காலாண்டுகளில், 1,100 ரூபாயினை தொடலாம். எனினும் 725 - 755 ரூபாய் என்ற லெவலில் வந்தால் மீண்டும் வாங்கி வைக்கலாம் என கணித்துள்ளனர்.

ஐபிஓ எப்போது?

ஐபிஓ எப்போது?


டிசம்பர் 14 அன்று தொடங்கிய இதன் ஐபிஓ , டிசம்பர் 16 அன்று முடிவடைந்தது. இது வெளியீட்டில் 119.62 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றது.

இந்த நிறுவனத்தின் எபிடா விகிதமானது 2019 - 2021ம் வரையிலான நிதியாண்டுகளில் முறையே 31%, 90%, 169% என்ற அளவுக்கு ஏற்றம் கண்டது. இதே எபிடா மார்ஜின் விகிதமானது 19.5%ல் இருந்து, 41.1% ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய பங்கு விலை நிலவரம்

தற்போதைய பங்கு விலை நிலவரம்

இன்று காலை பட்டியலின் போது 48% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், தற்போது (2.27 மணியளவில்) என்.எஸ். இ-ல் 35% ஏற்றம் கண்டு, 789.95 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இன்றைய உச்ச விலை 864 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 781 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 864 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 585 ரூபாயாகும்.

இதே பிஎஸ்இ-ல் 35.28% அதிகரித்து, 791.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+