முதல் நாளே ஜாக்பாட்.. குளோபல் ஹெல்த் 19% பிரீமியத்தில் பட்டியல்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெட்டாண்டா பிராண்டின் கீழ் மல்டி ஸ்பேஷாலிட்டி மருத்துவமனைகளை இயக்கிவரும் குளோபல் ஹெல்த் நிறுவனம், கடந்த நவம்பர் 3ம் தேதியன்று தனது பங்கு வெளியீட்டினை செய்தது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.

நவம்பர் 3 அன்று தொடங்கிய பங்கு வெளியீடானது நவம்பர் 7 அன்று முடிவடைந்தது. இந்த வெளியீட்டில் ஒரு பங்கின் விலையானது 319 - 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

எதிர்பார்த்ததை போலவே குளோபல் ஹெல்த் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளான இன்றே நல்ல வாய்ப்பினை கொடுத்துள்ளது.

 குளோபல் ஹெல்த் ஐபிஓ.. முக்கிய ஆங்கர் முதலீட்டாளர்கள் ஆதரவு.. லிஸ்டில் யாரெல்லாம் பாருங்க? குளோபல் ஹெல்த் ஐபிஓ.. முக்கிய ஆங்கர் முதலீட்டாளர்கள் ஆதரவு.. லிஸ்டில் யாரெல்லாம் பாருங்க?

குளோபல் ஹெல்த் 19% பிரீமியத்தில் பட்டியல்

குளோபல் ஹெல்த் 19% பிரீமியத்தில் பட்டியல்

குளோபல் ஹெல்த் நிறுவனம் இன்று அதன் பங்கினை பங்கு சந்தையில் பட்டியலிட்ட நிலையில், பி எஸ் இ-யில் இதன் விலையானது 18.5% பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டது. இதன் வெளியீட்டு விலையானது 336 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதே என் எஸி-யில் இப்பங்கின் விலையானது இன்று 19.3% அதிகரித்து, 401 ரூபாயாகவும் வர்த்தகமாகியுள்ளது.

பிகாஜி ஃபுட்ஸ் 7% பிரீமியத்தில் பட்டியல்

பிகாஜி ஃபுட்ஸ் 7% பிரீமியத்தில் பட்டியல்

இதே மற்றொரு நிறுவனமான பிகாஜி ஃபுட்ஸ் நிறுவனமும் பிஎஸ் இ-யில் 7% ஏற்றம் கண்டு, 321.15 ரூபாயாக ஏற்றம் கண்டு காணப்பட்டது. இதே என்எஸ்இ-யில் 7.6% அதிகரித்து, 322.80 ரூபாயாகவும் தொடங்கியது. பிகாஜி ஃபுட்ஸ் நிறுவனத்தின் வெளியீட்டு விலையானது 285 - 300 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிறுவனமும் நவம்பர் 3 அன்று தனது பங்கினை வெளியிட்டிருந்த நிலையில், நவம்பர் 7 அன்று முடிவடைந்தது.

பட்டியலிட்ட பிறகும் ஏற்றம்

பட்டியலிட்ட பிறகும் ஏற்றம்

இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 47 புள்ளிகள் குறைந்து, 61,826 என்ற லெவலில் காணப்பட்டது. பங்கு சந்தைகள் சரிவில் காணப்பட்டாலும், பட்டியலிடப்பட்ட பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுக்கும் விதமாக, முதல் நாளே நல்ல லாபத்தினை கொடுத்துள்ளன. இது பட்டியலிடப்பட்ட பிறகும் கூட 11.7 ஏற்றம் கண்டு, 335 ரூபாய் என்ற லெவலை குளோபல் ஹெல்த் நிறுவனம் எட்டியுள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

குளோபல் ஹெல்த் நிறுவனம் மற்றும் பிகாஜி ஃபுட்ஸ் நிறுவனங்கள் இரண்டும, முறையே 10 மடங்கு மற்றும் 27 மடங்கு பங்கு வெளியீட்டில் விண்ணப்பங்களை பெற்றிருந்தது. இது பங்கு வெளியீட்டின் போதே முதலிட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்தும், HNIகளிடம் இருந்தும் நல்ல வரவேற்பும் இருந்தது.

குளோபல் ஹெல்த் ஐபிஓ நிலவரம்

குளோபல் ஹெல்த் ஐபிஓ நிலவரம்

குளோபல் ஹெல்த் நிறுவனம் அதன் பங்கு வெளியீட்டின் மூலம் 2200 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், அது வெளியீட்டில் 10 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றிருந்தது. இந்த பங்கு வெளியீட்டில் ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக 13 லாட்கள் வரையில் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு லாட் என்படு 44 பங்குகள் ஆகும். ஆக ஒரு முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 572 பங்குகள் மூலம் 192,192 பங்குகளுக்கு விண்ணப்பித்திருக்கலாம்.

இவ்வளவு விண்ணப்பமா?

இவ்வளவு விண்ணப்பமா?

இந்த பங்கு வெளியீட்டில் புதிய வெளியீடாக 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மட்டுமே வெளியிடப்பட்டது. இது தவிர முதலீட்டாளர்கள் வசம் உள்ள 1705.6 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த பங்கு வெளியீட்டில் 10 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து 28.64 மடங்கு விண்ணப்பமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 4.02 மடங்கும் விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதே சில்லறை முதலீட்டாளர்கள் 0.88 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

 பிகாஜி புட்ஸ் நிலவரம்?

பிகாஜி புட்ஸ் நிலவரம்?

இதே பிகாஜி புட்ஸ் நிறுவனத்தில் 26.67 மடங்கும் விண்ணப்பிக்கப்படிருந்தது. நிறுவனம் 2,06,36,790 பங்குகளுக்கு எதிராக , 55,04,00,900 விண்ணப்பங்களை பெற்றது. குறிப்பாக தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து இந்த பங்கிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதில் 80 மடங்குக்கும் மேலாக விண்ணப்பங்கள் வந்தன. இதே நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் மத்தியில் 7.1 மடங்கும், சில்லறை முதலீட்டாளர்கள் 4.77 மடங்கும், ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்குகள் 4.38 மடங்கும் விண்ணப்பங்களை பெற்றிருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPO updates: Global Health lists at a premium of 19%: Bikaji foods surges 7% above

shares of Global Health lists at 19% premium; Bikaji Foods surges 8% on debut first day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X