பேடிஎம்-மின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பிறகு முதலீட்டாளர்கள் மத்தியில் பங்கு வெளியீடு பற்றிய அச்சம் இருந்தாலும், அது அவ்வளவாக எதிரொலிக்கவில்லை எனலாம்.
அதற்கு சிறந்த உதாரணம் தேகா இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ எனலாம். ஏனெனில் பங்கு வெளியீட்டின் முதல் நாளே 3.72 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக சில்லறை வர்த்தகர்கள் மத்தியில் 6.6 மடங்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
முதல் நாள் விண்ணப்பங்கள்
பங்கு வெளியீட்டின் முதல் நாளான இன்று 95.68 லட்சம் ஈக்விட்டி பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில், எதிராக 3.56 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது 3.72 மடங்காகும். அதோடு அதன் ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து இன்று 186 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளது.
அதிக ஆர்வம் காட்டிய சில்லறை முதலீட்டாளர்கள்
இதே சில்லறை முதலீட்டாளர்கள் முதல் நாளில் 6.6 மடங்கு பதிவு செய்துள்ளனர். இதே நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் இருமடங்கு வாங்கியுள்ளனர். இதே தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளார்கள் முன்பதிவு செய்யப்பட்ட பகுதியின் 1% பங்கிற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
தேகா இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ
சுரங்கத் தொழிலுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தேகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இன்று அதன் முதல் நாள் பொதுப் பங்கு வெளியீட்டினை செய்துள்ளது. இது டிசம்பர் 3 அன்று முடிவடையவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 619.22 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது.
பங்கு விலை நிர்ணயம்
இந்த பொது பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலையாக 443 - 453 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது. இந்த பங்கு வெளியீட்டில் 1,36,69,478 கோடி பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. இதில் புதிய வெளியீடு என்பது எதுவும் கிடையாது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் பங்கினை வைத்துள்ள பங்குதாரர்கள் மற்றும் புரோமோட்டார்களிடம் உள்ள பங்கினை தான் விற்பனை செய்யப்படவுள்ளது.
லாட் சைஸ் எவ்வளவு
இந்த பங்கு வெளியீட்டில் 33 பங்குகள் ஒரு லாட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக ஒரு லாட் வாங்க வேண்டுமெனில் 14,949 ரூபாய் முதலீடு செய்ய வேண்டிருக்கும். ஒருவர் அதிகபட்சமாக 13 லாட்களை அதிகபட்சம் வாங்கிக் கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது டிசம்பர் 13 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications