சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் 2 வாய்ப்புகள்.. நீங்க ரெடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பங்கு சந்தைகளில் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து, பல புதிய பங்குகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. 5 நாளில் ரூ.59,437 கோடி.. முதலீட்டாளர்களுக்கும் ஜாக்பாட் தான்..! வழக்கம்போல ரிலையன்ஸ் தான் டாப்.. 5 நாளில் ரூ.59,437 கோடி.. முதலீட்டாளர்களுக்கும் ஜாக்பாட் தான்..!

அதன் தொடர்ச்சியாக வரும் வாரத்திலும் 2 நிறுவனங்கள் தங்களது பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளன.

கோ பேஷன் நிறுவனத்தின் ஐபிஓ

கோ பேஷன் நிறுவனத்தின் ஐபிஓ

அதில் ஒன்று கோ பேஷன் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடானது நவம்பர் 17 அன்று தொடங்கி நவம்பர் 22 அன்று முடிவடையவுள்ளது.

தார்சன் புராடக்ஸ் நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் 1,024 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளது

எவ்வளவு நிதி திரட்டல்

எவ்வளவு நிதி திரட்டல்

மற்றொரு நிறுவனம் தார்சன் புராடக்ஸ், இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடானது நவம்பர் 15 அன்று தொடங்கவுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு நவம்பர் 17 அன்று முடிவடையவுள்ளது.

இதில் புதிய பங்கு வெளியீடாக 150 கோடி பங்குகளும், 1.32 பங்குகள் பங்குதாரர்களிடம் இருந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

கோ பேஷன் நிறுவனத்தின் நிதி திரட்டல்

கோ பேஷன் நிறுவனத்தின் நிதி திரட்டல்

இதே கோ பேஷன் நிறுவனம் 1,014 கோடி ரூபாய் நிதியினை திரட்ட உள்ளது.

இந்த பங்கு வெளியீட்டில் கோ பேஷன் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு சொந்தமான 1.29 கோடி பங்குகளையும் விற்பனை செய்யவுள்ளது.

ஐபிஓ விலை நிர்ணயம்

ஐபிஓ விலை நிர்ணயம்

கோ பேஷன் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலையானது 655 - 699 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் நிதியினை 120 பிரத்யேக விற்பனையகங்களை தொடங்கவுள்ளது. மேலும் வணிக விரிவாக்கத்திற்காகவும், செயல்பாட்டு மூலதனமாகவு பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தார்சன் புராடக்ஸ் விலை நிர்ணயம்

தார்சன் புராடக்ஸ் விலை நிர்ணயம்

தார்சன் புராடக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை நிர்ணயம் 635 - 662 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் லாட் சைஸ் 22 பங்குகள் ஒரு லாட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 1 லாட் அல்லது அதன் மடங்கில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IPO updates: Two IPO issues to raise Rs.2,038 crore this week

IPO updates: Two IPO issues to raise Rs.2,038 crore this week/ சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திரும் 2 வாய்ப்புகள்.. நீங்க ரெடியா.
Story first published: Sunday, November 14, 2021, 18:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X