இந்தியாவின் முதன்மை சந்தைகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மந்த நிலையில் இருந்தன. ஆனால், தற்போது மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பங்குச் சந்தை மீட்பு நிலைக்கு திரும்பியதால், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், முதன்மை சந்தையை மீண்டும் நோக்கி நகர்கின்றன.
2025-இன் மந்தமான தொடக்கத்துக்குப் பிறகு, பெரும் அளவிலான பப்ளிக் இஷ்யுக்கள் சந்தையில் வர தயாராகின்றன. NSDL, HDB Financial முதல் JSW Cement, Hero Fincorp போன்ற துறை முன்னோடிகள் வரை தயாராக உள்ளன. அடுத்த வாரங்களில் சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகவிருக்கின்றன. அடுத்த மாதம் சந்தைக்கு வரவிருக்கும் 5 ஐபிஓக்களின் மொத்த மதிப்பு ரூ.25,000 கோடியை தாண்டியுள்ளது.

HDB ஃபைனான்சியல்ஸ் IPO: HDFC வங்கியின் துணை நிறுவனமான HDB நிதி சேவைகள், NBFC துறையில் மிகப்பெரிய ஐபிஓவையும், கடந்த அக்டோபரில் நடந்த ஹூண்டாய் வெளியீட்டிற்குப் பிறகு மிகப்பெரிய ஐபிஓவையும் தொடங்க உள்ளது. இது ரூ.12,500 கோடி வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளது. இது வெறும் நிதி நடவடிக்கை மட்டுமின்றி, ஒழுங்குமுறை அளவுகோலாகும். ஏனெனில், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிப்படி, HDB போன்ற மேல் அடுக்கு NBFC-கள் செப்டம்பர் 2025-க்குள் பட்டியலிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NSDL IPO: CDSL- க்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பட்டியலிடப்பட்ட வைப்புத்தொகை நிறுவனமாக நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) மாற இருக்கிறது. இந்த ரூ.3,300 கோடி மதிப்புள்ள IPO முழுமையான விற்பனைக்கான சலுகையாக இருக்கும். எனவே, IDBI வங்கி மற்றும் NSE போன்ற முக்கிய பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை குறைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
JSW Cement IPO: JSW குழுமத்தைச் சேர்ந்த JSW Cement, ரூ.4,000 கோடிக்கான IPO-வை தயாரித்து வருகிறது. இதில், ரூ.2,000 கோடி புதிய பங்குகள் ஆகும். ரூ.2,000 கோடி பங்குதாரர்களால் விற்பனை செய்யப்படும் பங்குகள் ஆகும். JSW Cement தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ரியல் எஸ்டேட் மற்றும் Infrastructure துறைகள் வளர்ச்சி பாதையில் இருப்பதால், இந்த IPO-க்கு சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் நீண்டகால முதலீட்டாளர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.
Hero FinCorp IPO: Hero MotoCorp மற்றும் தனியார் இக்க்விட்டி நிறுவனமான ChrysCapital ஆகியவற்றின் ஆதரவுடன் இயங்கும் Hero FinCorp, பங்கு சந்தையில் ரூ.3,670 கோடிக்கான ஐபிஓவை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதில், ரூ.2,110 கோடி புதிய பங்குகளும், ரூ.1,570 கோடி பங்குதாரர்கள் விற்பனை செய்யும் பங்குகளும் அடங்கும். இந்த ஐபிஓ, சில்லறை நிதி சேவைகள் மற்றும் வளர்ந்து வரும் NBFC துறையில் முதலீடு செய்யும் விருப்பமுள்ளவர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கலாம்.
Kalpataru IPO: Kalpataru நிறுவனம் ரூ.1,590 கோடிக்கான புதிய பங்கு வெளியீட்டுடன் சந்தையை நோக்கி வருகிறது. இந்த ஐபிஓ ஜூலை 2025-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஓ மூலம் பெறப்படும் நிதி கடனை குறைப்பதற்காகவும், பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications