இஸ்ரேல்–ஈரான் மோதல்: பங்குச்சந்தை வீழ்ச்சி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86ஐ கடந்தது..

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இந்திய பங்குச் சந்தைகளில் வெகுவாக எதிரொலித்திருக்கிறது. ஜூன் 13ஆம் தேதி அன்று காலை 9.15 மணிக்கு பங்குச் சந்தை சரிவிலே தான் வர்த்தகத்தை தொடங்கியது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு: ஈரானின் ராணுவ தளங்கள் மற்றும் ஈரானின் அணுசக்தி கிடங்குகள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதற்கு ஈரான் கடுமையாக எதிர்வினை ஆற்றப் போவதாக அறிவித்திருக்கிறது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவிலான போர் பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் 12 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கின்றன. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருப்பது இதுவே முதல் முறை.

இஸ்ரேல்–ஈரான் மோதல்: பங்குச்சந்தை வீழ்ச்சி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86ஐ கடந்தது..

சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஈரான் இஸ்ரேல் மோதலால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன. காலை 9:25 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 925 புள்ளிகள் சரிவடைந்து 80, 766 புள்ளிகள் என வர்த்தகமானது. அதாவது சென்செக்ஸ் 1.13 சதவீதம் சரிவடைந்தது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 284 புள்ளிகள் சரிவடைந்து 24,603 என வர்த்தகமானது. அதாவது நிப்ட்டியை பொருத்தவரை 1.14 சதவீதம் சரிவடைந்தது.

போர் பதற்றமே காரணம்: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் 238 நிறுவனங்களின் பங்குகள் சிவப்பு நிறத்தில் தான் காட்சியளிக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டு இருக்கிறது இது தவிர இந்தியாவில் நேற்று ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து உள்ளிட்டவை காரணமாக முதலீட்டாளர்கள் பெருமளவு நம்பிக்கையை இழந்திருக்கின்றனர் என ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் தேவர்ஸ் வகீல் தெரிவித்திருக்கிறார்.

எண்ணெய் நிறுவன பங்குகள் வீழ்ச்சி: இந்திய பங்குச்சந்தையில் பாரத் பெட்ரோலியம், இந்திர பிரசாத் கேஸ் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இரண்டிலிருந்து நான்கு சதவீதம் வரை சரிவை கண்டிருக்கின்றன .

கச்சா எண்ணெய் விநியோகம் பாதிப்பு: ஈரான் மீதான மோதல் சில நாட்கள் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படும் . இது நடந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து தடை படும். இதனால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் இருக்கிறது., இதுவே பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என ஜியோஜித் நிறுவன ஆய்வாளர் விஜயகுமார் கூறுகிறார்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைந்து இருக்கிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.15 என உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ரூ.85.60 என இருந்தது இன்றைய தினம் ஒரே நாளில் 86 .15 ரூபாய் என உயர்ந்திருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+