இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி நிறுவனம், சுற்றுலா மற்றும் டிக்கெட் விற்பனையினை செய்து வரும் ஒரு நிறுவனமாகும். இதன் டிசம்பர் காலாண்டு முடிவில் அதன் நிகரபாலம் 22% அதிகரித்து, 256 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 209 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்டாக 3.5 ரூபாயினை அறிவித்துள்ளது. இது இப்பங்கின் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
செயல்பாட்டின் மூலம் வருவாய்
இதே செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது முந்தைய ஆண்டினை காட்டிலும் 70% அதிகரித்து, டிசம்பர் காலாண்டில் 918 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 540 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் வரிக்கு பிந்தைய லாபமானது செயல்பாடுகள் அதிகரித்த நிலையில் 13% அதிகரித்து, 226 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வருவாய் விகிதமானது 13% அதிகரித்து, 806 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரெக்கார்டு தேதி
இந்த நிறுவனம் இடைக்கால டிவிடெண்டினை அறிவித்துள்ள நிலையில், அதற்கான ரெக்கார்டு தேதியாக பிப்ரவரி 22- ஆக அறிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் வலுவான வளர்ச்சியினை கண்டிருந்தாலும், இணையத்தில் டிக்கெட் பதிவு வளர்ச்சியானது நல்ல வளர்ச்சி கண்டும் காணப்பட்டது. இதன் காரணமாக இதன் வருவாய் விகிதமானது அதிகரித்துள்ளது.
துறை வாரியாக வருமானம்
இதில் கேட்டரிங் சேவையில் வருவாய் விகிதம் 275% அதிகரித்து, 394 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 105 கோடி ரூபாயாக இருந்தது.
இதே ரயில் நீர் பிரிவில் வளர்ச்சி விகிதமானது 55% அதிகரித்து, 79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 68 கோடி ரூபாயாக இருந்தது.
டிக்கெட் விற்பனை பிரிவு
இணையத்தில் டிக்கெட் விற்பனை பிரிவில் வருவாய் விகிதமானது 4% குறைந்து, 301 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டி; 313 கோடி ரூபாயாக இருந்தது.
இதே இதன் சுற்றுலா வணிகம் பிரிவில் வளர்ச்சி 79% அதிகரித்து, 122 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் இன்று ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் இன்று 1.58% அதிகரித்து, 651.45 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 656.70 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 637 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.59% அதிகரித்து, 651.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 656.60 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 637.20 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 868.10 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 557 ரூபாயாகவும் உள்ளது.
போட்டி குறைவு
ஐஆர்சிடிசி-யை பொறுத்தவரையில் போட்டி என்பது மிக மிக குறைவே. ஆக ஐஆர்சிடிசி வளர்ச்சியானது தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்லவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதுவும் இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications