இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான (IRCTC) ஐஆர்சிடிசி-யின் பங்கு விலையானது, 52 வார உச்சத்தில் இருந்து 55% சரிவினைக் கண்டுள்ளது.
இது கடந்த 8 மாதங்களில் இப்பங்கின் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இதன் 52 வார உச்சமானது 1278.60 ரூபாயாக அக்டோபர் 19, 2021 அன்று தொட்டது. தற்போது பிஎஸ்இ-யில் இந்த பங்கின் விலையானது 575 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 407.16 ரூபாயாக தொட்டுள்ளது. இது ஜூலை 2, 2021 அன்று தொட்டது குறிப்பிடத்தக்கது.
டெக்னிக்கலாக சரிவு
கடந்த அமர்வின் முடிவு விலையானது 578.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று இதன் விலையானது 574.82 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.இதன் இன்ட்ராடே லோவாக இன்று காலை நிலவரப்படி 572.10 ரூபாயினை தொட்டுள்ளது.
இப்பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது.
நடப்பு ஆண்டில் சரிவு
நடப்பு ஆண்டில் இப்பங்கின் விலையானது 31% சரிவினைக் கண்டுள்ளது. இதே ஓராண்டில் இப்பங்கின் விலையானது 39.57% ஏற்றம் கண்டுள்ளது. இதன் சந்தை மூலதனம் 45,984 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் 0.43 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. இதன் மூலம் 2.46 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் குறையலாம்
தற்போதைய லெவலில் ஐஆர்சிடிசி பங்கின் விலை 569 ரூபாய்க்கு கீழாக முடிவடைந்தால், அது அடுத்ததாக 533 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எபிட்டா விகிதம் 2022ம் நிதியாண்டில் 949 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போது பயண தேவைகளில் அதிகரித்து வரும் நிலையில், வருவாய் விகிதம் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சியில் தாக்கம்
எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஐஆர்சிடிசியின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதிகரித்து வரும் பணவீக்கம் அதன் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் அதிகளவில் இப்பங்கினை வாங்குவதை தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இன்னும் விலை குறையும்போது பங்குகளை வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
கடன் இல்லா நிறுவனம்
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது தொடங்கிய காலத்தில் இருந்தே ஐஆர்சிடிசி பங்கு விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது. இது இனி வரும் நாட்களில் 550 ரூபாய் என்ற லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நிறுவனம் கடன் இல்லா ஒரு நிறுவனமாகும். இது இணையத்தில் டிக்கெட் பதிவு செய்வதில் பெரும் பங்கினை கொண்டுள்ளது. ஆக நீண்டகால நோக்கில் இன்னும் குறையும்போது வாங்கி வைக்கலாம்.
தற்போதைய நிலவரம் என்ன?
என் எஸ் இ-யில் தற்போது இப்பங்கின் விலையானது சற்று குறைந்து, 575.40 ரூபாயாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 1279.26 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 407.40 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 0.66% குறைந்து, 575.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 1278.60 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 407.16 ரூபாயாகும்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications