இந்திய பங்கு சந்தை வரலாற்றில் பொதுபங்கு வெளியீட்டிலேயே சாதனை படைத்த பங்கு எனில் அது ஐஆர்சிடிசி தான். இந்த நிறுவனம் பங்கு வெளியீடு செய்ததில் இருந்து முதலீட்டாளர்களுக்கு, தொடர்ச்சியாக நல்ல லாபத்தினை கொடுத்து வந்தது.
ஆனால் கடந்த அமர்வில் யாரும் எதிர்பாராத விதமாக பெரும் சரிவினைக் கண்ட நிலையில், இப்பங்கினை வாங்கி வைத்தவர்களுக்கு, பெரும் நஷ்டத்தினை கொடுத்தது எனலாம். எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நல்ல லாபத்தில் தான் உள்ளது.
கடந்த அமர்வில் மட்டும் இப்பங்கின் விலையானது அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 46% மேலாக வீழ்ச்சியினை கண்டது.
இன்றைய பங்கு நிலவரம்
ஐஆர்சிடிசியின் இந்த பலத்த வீழ்ச்சியானது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்டுத்தியுள்ளது எனலாம். கடந்த அமர்வில் என்.எஸ்.இயில் இந்த நிறுவன பங்கின் விலையானது 6,396 ரூபாயாக உச்சம் தொட்ட நிலையில் (52 வார புதிய உச்சம்), இன்றைய சந்தை முடிவில் என்.எஸ்.இயில் 18.71% அல்லது 1,020.50 ரூபாய் குறைந்து, 4,434.35 ரூபாயாக சரிவினைக் கண்டது. இன்றைய உச்ச விலை 4,999.80 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலையானது 4,377.30 ரூபாயாகும்.
பிஎஸ்இ-யில் என்ன நிலவரம்
இதே பிஎஸ்இ-யில் 17.34% அல்லது 930.05 ரூபாய் குறைந்து, 4,432.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம், நேற்றைய உச்சம் 6,393 ரூபாயாகும். இதே இன்றைய குறைந்த விலை 4,371.25 ரூபாயாகும். இதற்கிடையில் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 70,927 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஏன் இந்த சரிவு?
ரயில்வே துறையானது கட்டுப்பாட்டாளரை (Regulator) நியமிக்க உள்ள கூறப்பட்ட நிலையில், இது ஐஆர்சிடிசியின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தின் மத்தியில் கடும் சரிவினைக் கண்டது. எப்படியிருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இப்பங்கின் விலையானது அக்டோபர் மாதத்தில் நல்ல வளர்ச்சியினையே கண்டுள்ளது.
Array
ஐஆர்சிடிசியின் ஓபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 90% வரம்பினை எட்டியுள்ளது. இந்த விகிதமானது 95% தாண்டினால் F&Oவில் தற்காலிகமாக தடை செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இந்த தடையானது மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும்போது இந்த பங்குகள் மீண்டும் எஃப் & ஓ வர்த்தகத்திற்கு வரலாம். எனினும் இந்த விகிதமானது வரவிருக்கும் எஃப் & ஓ எஸ்க்பெய்ரியில் இருந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது.
புராபிட் புக்கிங் செய்திருக்கலாம்?
இந்த நிறுவனத்தின் பஙகு விலையானது கடந்த அமர்வில் 52 வார உச்சத்தினை எட்டிய நிலையில், புதிய உச்சமானது லாபத்தினை புக் செய்ய முதலீட்டாளார்களை தூண்டியிருக்கலாம். மேலும் கடும் வீழ்ச்சியினை கண்ட இப்பங்கின் விலையானது மேற்கொண்டு சரியலாமோ என்ற அச்சத்திற்கு மத்தியிலேயே முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக வெளியேற தொடங்கியதால், இப்பங்கின் விலையானது பலத்த வீழ்ச்சியினை கண்டுள்ளது.
முக்கிய லெவல்கள்
இப்படி பல யூகங்களுக்கும் மத்தியில் தான் இந்த பங்கின் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்னும் குறைந்தால், 4,200 மற்றும் 3800 என்பது அடுத்த முக்கிய சப்போர்ட்களாக உள்ளன. இதே மீண்டு வந்தால் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 4,800 மற்றும் 5,200 என்ற லெவல்களாக நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
மீடியம் டெர்மில் குறையலாம்
இதற்கிடையில் மேற்கொண்டு இந்த பங்கின் விலையானது டெக்னிக்கலாகவும் சற்று சரிவினை காணலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. ஆனால் மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம், ஆக குறையும் போது வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications