மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இந்த ஆண்டு அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது என்றால் மிகையில்லை, 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் தொடர்ந்து வளர்ச்சியில் இருந்த பங்குச்சந்தை வர்த்தகம், வருடத்தின் இறுதியில் மிகப்பெரிய பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
2021 ஆண்டில் எந்த அளவிற்கு முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தைக் கொடுத்ததோ, அதே அளவிற்குப் பல முன்னணி நிறுவனங்கள் 50 சதவீதம் வரையிலும் சரிவையும் எதிர்கொண்டு உள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
அப்படி 2021ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் நம்பி முதலீடு செய்த நிறுவனங்கள் பல கால்களை வாரிவிட்டது. இப்படி முதலீட்டாளர்களின் பணத்தைப் பந்தாடிய டாப் 10 நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.
ஐஆர்சிடிசி
இந்திய ரயில்வே துறையில் மோனோபோலியாக இருக்கும் காரணத்தால் ஐஆர்சிடிசி பங்குகள் 2019ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட்ட நாள் முதல் 2021 வரையில் 10 மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. செப்டம்பர் 2021 வரையில் 120 சதவீதம் வளர்ச்சியில் இருந்த ஐஆர்சிடிசி பங்குகள், மத்திய அரசு தனது கட்டண வருவாயில் இருந்து ஒரு பகுதியே கேட்ட ஒரே காரணத்தால் அக்டோபர் மாதம் மட்டும் 25 சதவீதம் வரையில் சரிந்தது தொடர்ந்து ஓரே நிலையில் வர்த்தகம் செய்து வருகிறது.
டாடா பவர்
டாடா பவர் பங்குகள் 2021ஆம் ஆண்டில் 190 சதவீதம் உயர்ந்துள்ளன, ஆனால் கடுமையான சரிவையும் கண்டுள்ளன. 2021ல் ரூ.75ல் இருந்து ரூ.257 ஆக உயர்ந்தது, ஆனால் அக்டோபரில் பங்கு விலை 20 சதவீதத்துக்கு மேல் சரிந்தபோது முதலீட்டாளர்கள் லாபத்தைப் பார்க்கத் துவங்கி அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கினர். அதன் பின்பு மீண்டு வரவே இல்லை.
டாடா ஸ்டீல்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி அளவு 2010 முதல் 2020 வரை கிட்டத்தட்ட இரு மடங்கு வரையில் உயர்ந்துள்ளது. 2021ல் அதிகப்படியான ஸ்டீல் தேவை இருந்த காரணத்தால் டாடா ல்டீல் பங்குகள் சுமார் 1,534.50 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனால் இந்த உயர்வுக்குப் பின்பு தொடர் சரிவைச் சந்தித்து தற்போது 1,102.95 ரூபாய்க்கு சரிந்துள்ளது.
IEX பங்குகள்
IEX பங்குகள் இந்த ஆண்டு 250 சதவீதம் உயர்ந்து, அக்டோபர் 19 அன்று ரூ. 280 ஐ எட்டிய போது முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கையை வைத்து முதலீடு செய்தனர் ஆனால் இன்று வரையில் தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து 248 ரூபாய் அளவில் தான் உள்ளது.
தீபக் நைட்ரைட்
தீபக் நைட்ரைட் பங்குகள் 2021ஆம் ஆண்டில் 165 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது. அக்டோபரில் எப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 3,020-ஐ எட்டியது, சிறந்த நிதி செயல்திறன் மற்றும் பினாலிக் தயாரிப்புகளின் வளர்ச்சி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. ஆனால் அக்டோபர் 19ஆம் தேதி ஏற்பட்ட 20 சதவீத சரிவில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியவில்லை.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் 2021ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய முக்கியமான ப்ளூ-சிப் பங்குகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு ரூ.180-ல் தொடங்கி, அதன் பிறகு ரூ.536 வரையில் உயர்ந்துள்ளது, வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் மூலம் 160 சதவீதத்திற்கும் மேலான உயர்வை பதிவு செய்தது டாடா மோட்டார்ஸ். இருப்பினும், சிப் பற்றாக்குறை பாதிப்புகளால் நவம்பர் மாத மத்தியில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
SREI இன்பரா
ஜூன் 2021 வரை SREI இன்பரா பங்குகள் ஏறக்குறைய 200 சதவீதம் உயர்ந்துள்ளன. ஆனால் இன்று அவை 52 வார உயர்விலிருந்து சுமார் 70 சதவீதம் குறைந்துள்ளன. நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் பணம் செலுத்த தவறியதன் காரணமாக ரிசர்வ் வங்கி அதன் நிர்வாகக் குழுவை மாற்றியமைத்து, நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கிய பின்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
PNB ஹைவுசிங் பைனான்ஸ்
கார்லைல் குழுமம் மற்றும் பிற முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்த பிறகு, ஜூன் 2021 வரை PNB ஹைவுசிங் பைனான்ஸ் பங்குகள் 150 சதவீதம் உயர்ந்தன. ஆனால் பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையமான செபி இந்த முதலீட்டுக்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் PNB வீட்டுவசதி-கார்லைல் ஒப்பந்தம் ரத்து செய்தது, அதன் 880 ரூபாயில் இருந்த பங்குகள் தற்போது 484.60 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
சத்பவ் இன்ஃப்ரா
2021ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், சத்பவ் இன்ஃப்ரா மற்றும் சத்பவ் இன்ஜினியரிங் பங்குகள் தத்தம் 100 மற்றும் 50 சதவீதம் உயர்வுடன் இருந்தது. மோசமான ஜூன் காலாண்டு முடிவுகள், மற்றும் சத்பவ் இன்ஜினியரிங் திட்டத்தை அதானி குழுமம் கைப்பற்றிய பின்பு தொடர் சரிவு தான். சத்பவ் இன்ஃப்ரா மற்றும் சத்பவ் இன்ஜினியரிங் பங்குகள் தனது 52 வார உச்சத்திலிருந்து தத்தம் 65 சதவீதம் மற்றும் 60 சதவீதம் சரிவில் உள்ளது.
வொக்கார்ட் நிறுவனம்
மே 2021 வரை வொக்கார்ட் நிறுவனத்தின் பங்குகள் 60 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து இருந்த நிலையில் தற்போது 52 வார உச்ச விலையில் இருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications