மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 (2014,19) நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனால் அந்த பத்து ஆண்டுகளில் மோடி அரசு மத்திய பட்ஜெட்டை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தாக்கல் செய்தது.
ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக இருந்தாலும், அது பெருன்பான்மையை காட்டிலும் குறைவாகவே இருந்தது. இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தயவோடு ஆட்சியை அமைத்தது.

இதன் விளைவாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கூட்டணி கட்சிகளை பா.ஜ.க அதிகம் நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் பட்ஜெட்களை முன்பு போல் பா.ஜ.க.வால் அவ்வளவு சுதந்திரமாக தாக்கல் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால், கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கி போக வேண்டிய நிலையில் பா.ஜ.க. உள்ளது. உதாரணமாக 2024 பட்ஜெட்டின் போது, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தங்களது மாநில வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நாயுடுவின் இந்த கோரிக்கை எதிர்வரும் பட்ஜெட் ஒதுக்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், பிரதமர் மோடி அண்மையில் ஆந்திர பிரதேசத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது ஆந்திர பிரதேசத்துக்கான தனது உறுதிப்பாட்டை மோடி வலுவாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதவிர, நெருங்கி வரும் மத்திய பட்ஜெட்டை கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கத்தின் நிதி திட்டங்களில் ஆந்திராவின் முன்னுரிமை பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு காய்களை நகர்த்தினார்.
குறிப்பாக பிரதமர் மோடியுடானான சந்திப்பின்போது, முந்தைய அரசாங்கத்தால் 94 மத்திய திட்டங்களிலிருந்து நிதி திருப்பி விடப்பட்டதை அவரிடம் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் விக்ஸித் பாரத் திட்டத்துடன் ஒத்துப்போகும் மாநில அரசின் ஸ்வர்ணந்திரா விஷன் 2047 திட்டம் குறித்தும் நாயுடு தெரிவித்தார்.
தற்போது 2025 பட்ஜெட் நெருங்கி வருவதால், மோடி அரசாங்கத்தின் அஜண்டாவில் ஆந்திர பிரதேசம் தொடர்ந்து முன்னுரிமை பெறுமா என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications