53 நாளில் 8,400 புள்ளிகள் சரிவு! வரலாறு காணாத 2-வது பெரிய சரிவை நோக்கி சென்செக்ஸ்..?

இன்று காலை, இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்க்கும் வர்த்தகர்களுக்கும் ஒரு இனிமையான காலைப் பொழுதாக இல்லை.

அடி மேல் அடி விழுந்து கொண்டு இருக்கிறது. ஏன் சென்செக்ஸ் தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கிறது, கடந்த சில வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் எவ்வளவு சரிந்து இருக்கிறது போன்ற கேள்விகளுக்கு விடை காண்போம்.

அதோடு தலைப்பில் கேட்ட கேள்விக்கும் பதில் காண்போம். முதலில் சென்செக்ஸ் சரிவில் இருந்து தொடங்குவோம்.

மலை டூ மடு

மலை டூ மடு

கடந்த 20-01-2020 அன்று தான் சென்செக்ஸ் தன் வாழ் நாள் உச்சமான 42,273 புள்ளிகளைத் தொட்டது. அதன் பிறகு தொடர்ந்து சரிவு தான் என்றாலும், பிப்ரவரி 27, 2020 வரை அது ஒரு சாதா சரிவாகத் தான் இருந்தது. அதற்குப் பிறகு தான் கிட்டத் தட்ட வரலாறு காணாத ஸ்பெஷல் சரிவாக மாறி இருக்கிறது.

சரிவு விவரங்கள்

சரிவு விவரங்கள்

பிப்ரவரி 27, 2020 அன்று சென்செக்ஸ் 39,745 புள்ளிகளில் நிறைவடைந்தது. மார்ச் 05, 2020 முதல் தொடர்ந்து பெரிய பெரிய சரிவுகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.
மார்ச் 06, 2020 அன்று மட்டும் 894 புள்ளிகள் சரிவு,
மார்ச் 09, 2020 அன்று 1,942 புள்ளிகள் சரிந்தது. இன்று மார்ச் 12, 2020-ல் சென்செக்ஸ் சுமாராக 1,850 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.

ஒட்டு மொத்தத்தில் வீழ்ச்சி

ஒட்டு மொத்தத்தில் வீழ்ச்சி

மேலே சொன்னது போல 20-01-2020 அன்று 42,273-ல் இருந்து இன்று நேரடியாக 33,850 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. வெறும் 53 நாட்களில் சென்செக்ஸ் 8,423 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து கிலியைக் கிளப்பி இருக்கிறது சென்செக்ஸ்.

காரணங்கள்

காரணங்கள்

கொடூரமான கொரோனா வைரஸ்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.14 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது, மார்ச் 11, 2020 அன்று அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் 4.7 % சரிவு கண்டது,
லண்டன் சந்தை 1.40 % சரிவு, ஆசிய சந்தைகள் எல்லாமே பயங்கர சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது, என பல முக்கிய காரணங்கள், இந்திய சந்தை சரிவுக்கு காரணமாக இருக்கிறது. இந்த காரணிகள் வலுவடைந்து கொண்டு இருக்கும் வரை சென்செக்ஸ் சரிவை நோக்கித் தான் செல்லும்.

வரலாறு காணாத சரிவை நோக்கி

வரலாறு காணாத சரிவை நோக்கி

கடந்த மார்ச் 09, 2020 அன்று சென்செக்ஸ் ஒரே நாளில் 1,941 புள்ளிகள் சரிந்தது தான் சென்செக்ஸ் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒரு நாள் சரிவு. ஆனால் இன்று சென்செக்ஸ் மீண்டும் சுமாராக 1,850 புள்ளிகளுக்கு மேல் சரிந்தே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஏதாவது நல்ல செய்தி வந்து, சென்செக்ஸ் சரிவு 1,625 புள்ளிகளுக்கு கீழ் வர வேண்டும். இல்லை என்றால், சென்செக்ஸ் தன் இரண்டாவது பெரிய சரிவை நோக்கிச் செல்வதாகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+