திடீரென 2 ரூபாய் பங்கை போட்டி போட்டு வாங்கும் முதலீட்டாளர்கள்- முகேஷ் அம்பானி தான் காரணம்..!

இந்திய பங்குச் சந்தையில் திடீரென சில குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு போட்டி அதிகரிப்பது அவ்வப்போது நடக்கும் ஒரு விஷயம். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பென்னி ஸ்டாக் நிறுவன பங்குகளை வாங்குவதற்கு பங்குச்சந்தையில் கடுமையான போட்டி நிலவியது.

ஈஷான் இன்டர்நேஷனல் லிமிடெட் (Ishan International Limited) என்ற ஸ்மால் கேப் நிறுவனம் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 4 சதவீதம் உயர்ந்தது. இதனை அடுத்து தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை அன்றும் இந்த பங்கு மதிப்பு 4 சதவீதம் என அதிகரித்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களிலும் இந்த நிறுவன பங்கை வாங்குவதற்கு கடுமையான போட்டி காணப்பட்டது.

திடீரென 2 ரூபாய் பங்கை போட்டி போட்டு வாங்கும் முதலீட்டாளர்கள்- முகேஷ் அம்பானி தான் காரணம்..!

இதற்கு முக்கிய காரணம் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்த நிறுவனத்திற்கு பெரிய ஆர்டரை வழங்கியுள்ளது தான். ஈஷான் இன்டர்நேஷனல் லிமிடெட் கடந்த ஆண்டு 35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய நிறுவனமாக இருக்கிறது.

இது தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து 60 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த நிறுவன பங்கினை வாங்குவதற்கு சந்தையில் கடுமையான போட்டி நிலவியதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிறுவன பங்கின் மதிப்பு மூன்று ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமாகிறது. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு அப்பர் சர்க்யூட்நிலையை எட்டியது. புதன்கிழமை அன்று கூட இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது 3 ரூபாய் என்ற அளவில் அப்பர் சர்க்யூட் நிலையை எட்டி வர்த்தகமானது.

கடந்த ஓராண்டில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 201 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 15 சதவீதமும், கடந்த ஒரு வார காலத்தில் 12 சதவீதமும் என இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த நிறுவன பங்கின் 52 வார கால அதிகபட்ச மதிப்பு 6 ரூபாய், 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 0.89 ரூபாய். இந்த நிறுவன பங்குகளில் 67 சதவீதம் புரமோட்டோர்களிடமும் 33 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் இருக்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு ஆர்டர்களை தந்திருப்பதால் மற்ற பெரிய நிறுவனங்களும் அடுத்தடுத்த இந்த நிறுவனத்தை நாடும் என ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதே இந்த பங்கு மதிப்பு உயர்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

ஈஷான் இன்டர்நேஷனல் நிறுவனம் கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பொறியியல், தயாரிப்பு, மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் சேவை வழங்கி வருகிறது. குறிப்பாக ஹைட்ரோ பவர் பிளான்ட்,பவர் ஜெனரேட்டர்கள், பாய்லர்கள் ஆகிய பிரிவுகளில் சேவை வழங்குகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+