இந்தியப் பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உச்சபட்ச உயர்வைக் கண்டு வரும் வேளையில், ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் எதிரொலி காரணமாக இன்று அதிகப்படியான சரிவைப் பதிவு செய்துள்ளது. காலை வர்த்தகம் துவங்கி 15 நிமிடத்தில் 6 லட்சம் கோடி அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்தது. இதன் பின்பும் தொடர் சரிவு பாதையில் இருக்கிறது.
ஈரான்- இஸ்ரேல் தாக்குதல் மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது, இதன் காரணமாக உலகச் சந்தைகளிலும் பெரும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தைகளின் சாதனை முன்னேற்றம் தடைபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்த சூழலில், ஈரான் - இஸ்ரேல் மோதலால் ஏற்படும் விளைவுகள் இந்திய பங்குச் சந்தையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படக் கூடிய அதிகமான காரணிகளாக இருக்கும் வேளையில் 14 இந்திய நிறுவனங்களை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இஸ்ரேல் தொடர்புடைய இந்திய நிறுவனங்கள்: ஈரான் - இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்படக்கூடிய 14 இந்திய நிறுவனங்களை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதில் சில முன்னணி நிறுவனங்கள் அதானி Ports, சன் பார்மா, லூப்பின், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

இஸ்ரேலில் முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள்: அதானி போர்ட்ஸ் நிறுவனம் இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. சன் பார்மா நிறுவனம் டாரோ பார்மா நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறது. இதேபோல், என்எம்டிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், டைட்டன், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் லார்சன் & டூப்ரோ (எல்&டி) ஆகிய நிறுவனங்களும் இஸ்ரேலில் முதலீடு செய்துள்ளன.
சிம்பிள் ஐடியா: மேலும் இன்றைய வர்த்தகத்தில் இந்த 14 பங்குகளில் பெரும்பாலானவை சரிவுடன் துவங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து Buy on Dips என்ற அடிப்படையில் நீண்ட கால கண்ணோட்டத்தில் வாங்கலாம். அல்லது கூடுதல் சரிவை ஏற்றுக்கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் இப்பங்குகளைச் சரியான நேரத்தில் விற்பனை செய்யலாம்.
முதலீட்டாளர்களின் எச்சரிக்கை: பங்குச் சந்தைகள் ஏற்கனவே உச்சபட்ச அளவில் வர்த்தகமாகி வருவதால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் சந்தை வல்லுனர்கள். இந்த மோதலின் பின்விளைவுகள் குறித்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த சில நாட்களாக சாதனையான உயர்வை எட்டிய வேளையில், புதிய புவிசார் அரசியல் அதிகரிப்பு ஐடி, ஏற்றுமதி, பார்மா, வங்கி மற்றும் பல துறைகளில் முதன்மையாகப் பாதிக்கலாம்.
ஈரான் - இஸ்ரேல் மோதலால் தங்கம் விலை 50 முதல் 100 டாலர் வரையில் சர்வதேச சந்தையில் அதிகரிக்கலாம், இதேபோல் கச்சா எண்ணெய் விலை 90 டாலரில் இருந்து 93-95 டாலருக்கு உயரலாம். இவை அனைத்தும் நாட்டின் பணவீக்கத்தையும், வர்த்தக பற்றாக்குறையையும் பாதிக்கும் காரணிகளாக உள்ளது.
More From GoodReturns

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?



Click it and Unblock the Notifications