ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பங்குச் சந்தை குறியீடுகள் சரிவை சந்தித்தன. இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக, காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமான இடங்களை தகர்த்து வருகிறது இஸ்ரேல் படைகள்.
சனிக்கிழமை காலையில் துவங்கிய ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் படைகளும் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போரின் மூலம் இவ்விரு தரப்பில் இருப்போர் மட்டும் பதிக்கப்படாமல் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களும் பல காயமடைந்து, மரணம் அடைந்தும் உள்ளனர்.

ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, இஸ்ரேலுக்கான முக்கிய பங்குக் குறியீட்டான TA-35 குறியீடு ஞாயிற்றுக்கிழமை 7.6 சதவிகிதம் சரிந்தது, இது மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய சரிவாகும். இஸ்ரேல் நாட்டில் பங்குச்சந்தை ஞாயிற்றுக்கிழமை துவங்கி வியாழக்கிழமை மூடப்படும் வழக்கத்தை கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போர் வளைகுடா நாடுகளின் பங்குச்சந்தையும் பாதித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் மிகப்பெரிய பங்குச் சந்தையாக விளங்கும் சவுதி அரேபியாவில் உள்ள தடாவுல் ஆல் ஷேர் இன்டெக்ஸ் ஞாயிற்றுக்கிழமையும் 1.3 சதவீதம் சரிந்தது.

இதேபோல் ப்ளூம்பெர்க் தகவல் படி குவைத், கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தை குறியீடுகளும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கிறது. எகிப்தின் பங்குச் சந்தை குறியீடான EGX30 2.60 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் தாக்கம் நாளை வர்த்தகம் துவங்கும் போது ஆசிய சந்தையில் கட்டாயம் எதிரொலிக்கும்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 364.06 புள்ளிகள் உயர்ந்து 65,995.63 புள்ளிகளை எட்டியிருந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 107.75 குறியீடு 19,653.50 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications