இந்தியாவின் ரயில்வே பங்குகள் இன்று கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. அந்தவகையில் இன்றைய பங்குச் சந்தையில் குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பல துறைகளில் சரிவான வர்த்தகத்தை செய்தது. இன்று குறிப்பிடத்தக்க வகையில், ரயில்வே பங்குகளில் விற்பனை அதிகரித்தது. அதில் குறிப்பாக ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
இதுவரையில், ரயில்வே பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் அதிகமாக வாங்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போதைய நிலைமையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக நாட்கள் வைத்திருப்பதில் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

இவற்றுடன் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளும் தாக்கத்தின் அறிகுறிகளைக் காட்டியது.மேலும் இறுதி நாளில் பாஜக இரு மாநிலங்களிலும் தோல்வியடையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் கடுமையான விற்பனை அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று லக்ஷ்மிஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சித் தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறினார்.
ரயில்வே பங்குகள் என்ன ஆனது?: அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் 2.02 மணியளவில் ஆர்விஎன்எல் பங்குகள் கடுமையான சரிவைக் கண்டது. இது 7.74 சதவீதம் குறைந்து ரூ.455.20 ஆக வர்த்தகமானது. கடந்த சில நாட்களில் இந்த பங்கு ரூ.500 முதல் 550 வரையிலான வர்த்தகத்தை கண்டுள்ளது. ஆனால், கடந்த ஐந்து நாட்களில் 12 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதமும் பங்குகள் குறைந்துள்ளன.
என்எஸ்இ-யில் ரயில்டெல் கார்ப்பரேஷன் (Railtel)ஆஃப் இந்தியாவின் பங்குகள் 7.52 சதவீதம் சரிந்து ரூ.399.40 ஆக இருந்தது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) பங்கு விலை திங்கள்கிழமை மதியம் 2.02 மணியளவில் 1.92 சதவீதம் சரிந்து ரூ.855.95க்கு வர்த்தகமானது.
அதே நேரத்தில், இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRFC) நிறுவனமும் கடும் சரிவைச் சந்தித்து 4.63 சதவீதம் குறைந்து ரூ.145.03-க்கு வர்த்தகமானது. கடந்த ஐந்து நாட்களில் பங்கு விலை 7 சதவீதம் சரிந்து கடந்த மாதத்தில் 14 சதவீதம் சரிந்துள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications