உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான கவலைகளால், இந்திய ஐடி துறைப் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதில், டிசிஎஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் (Infosys) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 56 பில்லியன் டாலருக்கும் அதிகமாக குறைந்தது.
ஆந்த்ரோபிக் நிறுவனம் ஆந்த்ரோபிக் பிபிசி (Anthropic PBC) என்ற ஏஐ கருவியை வெளியிட்டது. இதன் பின், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 56 பில்லியன் டாலர் சரிந்தது. இந்த ஏஐ கருவி இந்திய ஐடி நிறுவனங்களின் வணிக மாதிரிகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. இதனால் பெருமளவில் இந்த பங்குகளின் மதிப்புகள் சரிந்தன. ஆனால் இனி தான் இந்திய ஐடி பங்குகளுக்கு வசந்த காலம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஹெச்எஸ்பிசி (HSBC) மற்றும் ஜேபி மோர்கன் (JPMorgan) ஆய்வாளர்கள் AI குறித்த கவலைகள் மிகைப்படுத்தப்பட்டவை எனக் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவை தங்கள் செயல்பாடுகளில் ஒருங்கிணைக்க இந்திய ஐடி நிறுவனங்களின் உதவி தேவைப்படும் என்பதால் இத்துறை பயனடையும் என்கின்றனர். பிபிஎஃப்ஏஎஸ் மியூச்சுவல் ஃபண்டின் ஆராய்ச்சித் தலைவரும் நிதி மேலாளருமான ரௌனக் , "ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றத்தின் போதும், ஐடி நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்து, ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து, வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளன" என்று தெரிவித்தார்.
இந்திய மென்பொருள் நிறுவனங்களில் ஏற்பட்ட சரிவு மீண்டுவர வாய்ப்புள்ளது என சில முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தாக்கம் குறித்த கவலைகளால் உலகளவில் தொழில்நுட்பப் பங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உற்பத்தித்திறன் அதிகரிப்பை இலக்காகக் கொண்ட வணிகங்கள் சவால்களைச் சந்தித்து வருகின்றன.
ஆந்த்ரோபிக்கின் அறிவிப்புக்குப் பிறகு என்எஸ்இ நிஃப்டி ஐடி குறியீடு 15% சரிந்துள்ளது. இது மார்ச் 2020க்குப் பின் இத்துறை கண்ட மிக மோசமான மாதமாகும். சீன மற்றும் ஆஸ்திரேலிய மென்பொருள் துறை பங்குகளும் பாதிக்கப்பட்டாலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அடையாளமாகப் பார்க்கப்பட்ட இந்திய ஐடி பங்குகளின் சரிவு பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
1990களின் பிற்பகுதியில், Y2K பிழையைத் தீர்ப்பதில் மேற்கத்திய நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம் இந்திய ஐடி அவுட்சோர்சிங் நிறுவனங்கள் பிரபலமடைந்தன. உலகளாவிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பல நெருக்கடிகள், மொபைல் தொலைத்தொடர்பு முதல் கிளவுட் கம்ப்யூட்டிங் வரையிலான புதிய தொழில்நுட்பங்களின் வருகை என அனைத்தையும் அவை கடந்து வந்துள்ளன. இப்போது, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸின் வளர்ச்சியால் தற்போதைய மென்பொருள் வணிக மாதிரி காலாவதியாகிவிடும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
எனினும், ஹெச்எஸ்பிசி-யின் ஸ்டீபன் பெர்சி (Stephen Bersey) போன்ற ஆய்வாளர்கள் இந்த பார்வைகளை தர்க்கமற்றவை என்று நிராகரிக்கின்றனர். பிப்ரவரி 9 அன்று ஒரு குறிப்பில் அவர், "செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் தகவல்களின் முழு திறனைப் பயன்படுத்த, AI மற்றும் AI அல்லாத அமைப்பு கூறுகளுக்கு இடையிலான டிஜிட்டல் இடைவினைகளை நிர்வகிக்க மென்பொருள் அவசியம்" என்கிறார்.
மேலும், இந்திய நிறுவனங்களுக்கு நீண்டகாலமாகவே இத்துறையில் நிபுணத்துவம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். "இந்தியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்குப் பல தசாப்தங்களாக, நிறுவனத் தர மென்பொருளைப் பெரிய அளவில் உருவாக்கும் மற்றும் சந்தைப்படுத்தும் திறன் உள்ளது" என்றும் ஸ்டீபன் பெர்சி கூறுகிறார்.
நிறுவனங்கள் தங்கள் வருவாய் அறிக்கைகளில் AI பற்றி அதிகமாகப் பேசுவதுடன், அது தொடர்பான வருவாய்களையும் வெளிப்படுத்தி வருகின்றன. ஜனவரியில் டிசிஎஸ் (TCS), AI தீர்வுகளிலிருந்து ஆண்டுக்கு 1.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்படுவதாகவும், இது காலாண்டு அடிப்படையில் 17% வளர்ச்சி அடைவதாகவும் அறிவித்தது.
எம்ஆர்ஜி கேப்பிடலின் (MRG Capital) போர்ட்ஃபோலியோ மேலாளர் மனு ரிஷி குப்தா (Manu Rishi Guptha), இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சாதகமான இரண்டு முக்கிய அம்சங்களை சந்தை கவனிக்கத் தவறிவிடுகிறது என்றார். அவை, AI வணிக மாதிரிகளை மாற்றியமைக்கும்போது நிதி அளிக்கக்கூடிய பெரிய ரொக்க கையிருப்பு, மற்றும் விரைவாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு இளம் பணியாளர் சக்தி. இந்த பங்குச்சந்தை சரிவு உண்மையில் "மறைக்கப்பட்ட வாய்ப்பாக" இருக்கலாம் என்று குப்தா தெரிவித்தார். இத்துறை தொடர்ந்து வலுவான ஆர்டர் வரவுகளையும் காண்கிறது என்றும், பங்கு மதிப்பீடுகள் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications