பங்குச் சந்தையில் முக்கியமான சில பங்குகள் அதன் முதலீட்டாளர்களுக்கு மறக்கமுடியாத வருமானத்தை அள்ளிக் கொடுக்கின்றன. ஒரு வகையில் லாபம் மட்டும் இல்லாமல் கூடுதல் பலனையும் அந்த பங்குகள் அளிக்கின்றன. அந்த வகையில், ஐடி நிறுவனமான ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொலியூஷன்ஸ் பங்கு அதன் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஏற்றத்தை கொடுத்துள்ளன. 2:1 என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்ட பங்கு ஆனது இன்று நல்ல ஏற்றத்தை பதிவு செய்துள்ளது
ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொலியூஷன்ஸ் பங்குகளில் இன்று முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இன்று ஜனவரி 20, 2025 முதல் இந்த நிறுவனத்தின் பங்குகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீத மேல் சர்க்யூட்டில் ரூ.46.74க்கு திறக்கப்பட்டது.

நிறுவனம் தனது பங்குகளை 2:1 என்ற விகிதத்தில் பிரிப்பதாக அறிவித்தது. அதாவது ஒவ்வொரு பங்கும் 2 புதிய பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 அன்று பங்குப் பிரிப்புத் தேதிக்கு முந்தைய வர்த்தகத்திற்கான பதிவுத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தேதிக்குப் பிறகு பங்குதாரர்கள் மட்டுமே பிரிவின் பலன்களைப் பெற முடியும்.
முன்னதாக, ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸ் இன் ஒவ்வொரு பங்கின் முகமதிப்பு ரூ.2 ஆக இருந்தது. ஆனால் இப்போது புதிய பிரிவிற்குப் பிறகு, நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கின் முகமதிப்பு ரூ.1 ஆக மாறியுள்ளது. இந்த பங்கு பிரிப்பு ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸ் மூலம் பிரிக்கப்பட்ட இரண்டாவது பங்கு ஆகும். முன்னதாக 2026 ஆம் ஆண்டில், நிறுவனம் 5:1 என்ற விகிதத்தில் பங்குகளைப் பிரித்தது. இதில் ரூ.10 முக மதிப்புள்ள பங்குகள் ரூ.2 முக மதிப்புள்ள 5 பங்குகளாகப் பிரிக்கப்பட்டன.
பங்கு பிரித்தலுக்குப் பிறகு, பிரிவின் விகிதத்திற்கு ஏற்ப பங்குகளின் விலை சரிசெய்யப்படுகிறது. ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸ் பங்குகள் கடந்த ஓராண்டில் 49 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, அதே சமயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 553 சதவீத லாபத்தை அளித்துள்ளன.
ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸ் என்பது கணினி மென்பொருள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தரவு செயலாக்க சேவைகளை வழங்கும் முன்னணி ஐடி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ரூ.2,039.18 கோடி ஆகும்.


Click it and Unblock the Notifications