இந்திய ஐடி பங்குகள் மீண்டும் களைகட்டத் தொடங்கிவிட்டன. கடந்த சில காலாண்டுகளாக மந்த நிலையில் இருந்து வந்த இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற பங்குகள், இன்று ஒரே நாளில் 3% வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளன.
ஐடி பங்குகளில் ஏற்பட்ட இந்த திடீர் ஏற்றமானது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (FIIs) வருகையையும், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு மத்தியில் கண்டுள்ளது. குறிப்பாக இன்ஃபோசிஸ் -ன் அமெரிக்கன் டெபாசிட்டரி ரிசிப்ட்ஸ் (ADR) ஒரே நாளில் பெரும் பாய்ச்சலைக் கண்டது. இது இந்திய ஐடி சந்தையிலும் ஒரு பாசிட்டிவ் அலையை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் தான் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஐடி பங்குகள் மீண்டும் வேகமாக ஏறத் தொடங்கியுள்ளது. இது உங்களுக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பாக அமையுமா? அவற்றின் உண்மை நிலவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரூபாய் மீள்ச்சி!
இந்திய ஐடி துறையை சேர்ந்த பங்குகளான இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டிசிஎஸ் பங்குகள், இன்றைய வர்த்தக தினத்தில் 3% வரையில் ஏற்றம் கண்டுள்ளன. இதற்கு இந்திய ரூபாயின் மதிப்பானது வலுவான மீட்சி கண்டுள்ளதும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் 91.07 ரூபாய் என்ற அளவுக்கு வீழ்ச்சி கண்ட ரூபாய், தற்போது 89.30 - 89.60 ரூபாய்க்குள் வலுவடைந்துள்ளது. இந்த மீட்சியானது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
அன்னிய முதலீடுகள் வரத்து!
இந்திய ரூபாய் மதிப்பானது உயர்ந்து வரும் சூழலில், அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் வந்தது போன்ற காரணங்களால், நீண்ட நாட்களாக பங்குகளை விற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள், மீண்டும் இந்திய சந்தையில் முதலீடுகளை குவிக்க தொடங்கியுள்ளனர். கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும் 3,776 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அவர்கள் வாங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று 1,831 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் வி.கே.விஜயகுமார் கூறுகையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து வருவதால், 2026ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இந்தியாவிற்குத் திரும்புவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஐடி பங்குகள் நிலவரம்?
விப்ரோ பங்கானது 3% அதிகரித்து, 373.22 ரூபாயாக காணப்படுகிறது. இன்ஃபோசிஸ் பங்கு விலையானது 2.25% அதிகரித்து, 1675.60 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதுவே இன்ஃபோசிஸ் பங்கு விலையானது அதன் உச்சத்தின் அருகில் காணப்படுகிறது. ஹெச்.சி.எல் டெக் பங்கு மற்றும் டிசிஎஸ் பங்கானது 1.5% வரையில் ஏற்றம் கண்டுள்ளன. ஆக வரும் நாட்களில் ஐடி நிறுவனங்களின் தனிப்பட்ட நிதி நிலவரம், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், சரியான ஆலோசனையுடன் வாங்க திட்டமிடலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications