டொபாக்கோ மற்றும் FMCG நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 3 சதவீதம் வரை சரிவடைந்து வர்த்தகமானது. ஐடிசி நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை வைத்திருக்கும் பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ எனப்படும் பிஏடி நிறுவனம் தன்னுடைய பங்கில் கணிசமான பகுதியை விற்பனை செய்ததே இதற்கு காரணம்.
இந்தியாவில் சிகரெட் மற்றும் FMCG பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக ஐடிசி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பிஏடி நிறுவனம் கணிசமான அளவு பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் தன்வசம் இருந்த பங்குகளில் 2.56 சதவீத ஈக்விட்டி பங்குகள் அதாவது 32 கோடி பங்குகளை 13 ,334 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. குறிப்பிட்ட சில முதலீட்டு நிறுவனங்களிடம் இந்த பங்குகள் கை மாறி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஒரு பங்கின் விலை 417 ரூபாய் என்ற மதிப்பில் பிஏடி நிறுவனம் 32 கோடி பங்குகளை விற்பனை செய்திருக்கிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து மே 28ஆம் தேதி அன்று காலை 9.18 மணி அளவில் ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு தேசிய பங்குச்சந்தையில் 3.8 சதவீதம் வரைந்து 417 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் 4 சதவீதம் வரை சரிந்து 415 ரூபாய் என வர்த்தகமானது. இந்த பங்கு விற்பனையில் முதலீட்டு வங்கிகளான சிட்டி மற்றும் கோல்ட்மேன் சச்ஸ் ஆகியவை முன் நின்று நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
2.56 சதவீத பங்குகளை விற்பனை செய்திருந்தாலும் ஐடிசி நிறுவனத்தில் பிஏடி நிறுவனம் வசம் இருக்கும் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து 23.1 சதவீதமாக நீடிக்கிறது. தொடர்ந்து ஐடிசி நிறுவனத்தில் அதிக அதிகாரம் கொண்ட ஒரு ப்ரமோட்டராக பிஏடி நிறுவனமே நீடிக்கிறது. ஐடிசி நிறுவன பங்கின் 52 வார கால உயர்ந்த பட்ச பங்கு மதிப்பு 499 ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 5,42,980 கோடி ரூபாயாக இருக்கிறது.
இந்த நிறுவன பங்கின் புக் வேல்யூ 55. 96 ஆகவும் , பேஸ் வேல்யூ 1ஆகவும் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் ஐடிசி நிறுவனத்தின் வருமானம் 73, 609 கோடி ரூபாயாகும் இதில் 20 , 751 கோடி ரூபாய் லாபமாகும். அண்மையில் தான் ஐடிசி நிறுவனம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு தலா 7.85 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்படும் என அறிவித்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications