FMCG நிறுவனமான ஐடிசி-யின் பங்குகள் இன்று ரூ.334.85 ஆக 1% சரிந்தன. இது 52 வாரங்களில் இல்லாத புதிய குறைந்தபட்ச விலையாகும். இந்தச் சரிவுக்கு, சந்தையின் பொதுவான பலவீனமும், சிகரெட்டுகள் மீதான கலால் வரி உயர்வு அச்சமும் காரணமாக அமைந்தன.
மத்திய அரசு புகையிலைப் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் கூடுதல் கலால் வரியை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. நிதி அமைச்சகத்தின் மத்திய கலால் சட்டத் திருத்தங்களின்படி, சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து, 1,000 சிகரெட் ஸ்டிக்குகளுக்கு ரூ2,050 முதல் ரூ 8,500 வரை கலால் வரி விதிக்கப்பட உள்ளது. இந்த புதிய வரி, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள 40% ஜி.எஸ்.டி.க்கு கூடுதலாகப் பொருந்தும். அதேபோல், பிப்ரவரி 1 முதல் பான் மசாலா நிறுவனங்களின் உற்பத்தித் திறனின் அடிப்படையில் செஸ் வரி விதிக்க 'சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் சட்டத்தை’ அரசு அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், பான் மசாலா மீதான ஒட்டுமொத்த வரிச்சுமை 40% ஜி.எஸ்.டி. உட்பட 88% எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். இந்தக் திருத்தப்பட்ட அமைப்பு, 28% ஜி.எஸ்.டி. மற்றும் இழப்பீட்டு செஸ் கொண்ட முந்தைய புகையிலை வரி விதிப்பு முறையை மாற்றியமைக்கிறது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஐ.டி.சி. பங்குகள் பல பங்குத் தரகு நிறுவனங்களால் தரமிறக்கப்பட்டுள்ளன. நூவாமா நிறுவனம், ஐ.டி.சி.யின் பங்குகளை "வாங்கு" என்பதிலிருந்து "வைத்திரு" என்று தரமிறக்கியுள்ளது. மேலும் அதன் இலக்கு விலையை ஒரு பங்குக்கு ரூ 415–ரூ 534 ஆகக் குறைத்துள்ளது.
வரி உயர்வு எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய நூவாமா நிறுவனம் "சிகரெட்டுகள் மீதான கடுமையான வரி உயர்வை நாங்கள் எதிர்பார்த்தாலும், அதன் அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது. இது ஐ.டி.சி.யின் சிகரெட் விற்பனை அளவுகள் மற்றும் EBITDA மதிப்பீடுகளிலும், அதன் மடங்குகளிலும் ஒருமித்த கருத்தை தரமிறக்க வழிவகுக்கும்" என்கிறது.
இதேபோல், மோதிலால் ஓஸ்வால் நிறுவனமும் ஐ.டி.சி.யை "வாங்கு" என்பதிலிருந்து "நடுநிலை" என்று தரமிறக்கியது. அதன் இலக்கு விலையை ரூ 400 ஆகக் குறைத்தது. நிலையான வரி விதிப்பு முறை சட்டவிரோத சிகரெட் சந்தையைக் கட்டுப்படுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐ.டி.சி.யின் சிகரெட் விற்பனை ஆண்டுக்கு 5% வளர்ச்சியடைய உதவியதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.
வரி உயர்வு காரணமாக சட்டப்பூர்வ சிகரெட் விற்பனை குறையலாம் என்றும், சட்டவிரோத பிராண்டுகளுக்கு மாறுவதற்கு வழிவகுக்கலாம் என்றும் மோதிலால் ஓஸ்வால் கருத்து தெரிவித்தது. மேலும், தற்போதைய நிகர லாபத்தை ஒரு சிகரெட் ஸ்டிக்கிற்குப் பராமரிக்க, குறைந்தபட்சம் 25% விலை உயர்வாவது ஐ.டி.சி.க்கு தேவைப்படும் என மதிப்பிட்டுள்ளது.
சிகரெட்டுகள் மீதான வருவாய் அழுத்தம், குறுகிய கால ஊக்கிகளை (குறைந்த புகையிலை விலைகள், FMCG மற்றும் காகிதத் துறையின் மீட்பு) அகற்றி, மதிப்பீட்டின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும் என்று மோதிலால் ஓஸ்வால் மேலும் குறிப்பிட்டது.
இதற்கிடையில், ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனமும் ஐ.டி.சி. பங்குகளின் தரத்தை 'வைத்திரு’ என்று மாற்றியுள்ளது. அதன் இலக்கு விலையை ரூ380 ஆகக் குறைத்தது. "சிகரெட் வியாபாரத்தில் சமீபத்திய வரி உயர்வுகளையும், இத்துறையின் சவால்களையும் கருத்தில் கொண்டு, FY26/FY27க்கான லாப வரம்பு மதிப்பீடுகளை நாங்கள் குறைத்துள்ள போதிலும், நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சியில் நாங்கள் சாதகமாக இருக்கிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
குறுகிய காலத்தில், FMCG பங்கு அழுத்தம் நீடித்து வருகிறது. ஜனவரி மாதத்தில் ஒன்பது வர்த்தக நாட்களில் ஐ.டி.சி.யின் பங்கு விலை 17% சரிந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் சுமார் 20% மற்றும் ஒரு ஆண்டில் 24% சரிவைச் சந்தித்துள்ளது. ஐ.டி.சி. பங்குகள் பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. ஆகிய இரண்டு பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. பிப்ரவரி 1, 2025 அன்று, ஒரு பங்கின் விலை ரூ 471.50 ஐத் தொட்டு, 52 வார உச்சத்தை எட்டியது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications