ஐடிசி பங்கினை வாங்கி போடலாமா.. தரகு நிறுவனங்களின் அட்டகாசமான கணிப்பு என்ன?

சிகரெட் டு ஹோட்டல் வரையிலான வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனமான ஐடிசியின் பங்குகள் பிஎஸ்இ-யில் 1% மேலாக உயர்ந்து, 401.70 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இன்று அதன் 52 வார உச்சத்தினையும் எட்டியுள்ளது.

இது இந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவானது வெளியாகவிருக்கும் நிலையில், நிபுணர்கள் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.

இந்திய பங்கு சந்தையில் இன்றும் வலுவான ஏற்றத்தினை பதிவு செய்துள்ள நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஐடிசி, கடந்த ஆண்டினை காட்டிலும் சுமார் 50 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

ஐடிசி பங்கினை வாங்கி போடலாமா.. தரகு நிறுவனங்களின் அட்டகாசமான கணிப்பு என்ன?

உள்நாட்டு தரகு நிறுவனமான பிரபுதாச் லில்லாதேர் இப்பங்கின் இலக்கு விலை 444 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 13% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் ஐடிசி சந்தையில் சிறந்த டாப் பெர்பார்மர்களில் ஒன்றாக உள்ளது.

இதே ஷேர்கான் நிறுவனம் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை 450 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையில் இருந்து, 15 சதவீதம் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

இது வரவிருக்கும் ஆண்டுகளிலும் வலுவான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் லாபகரமான ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

கடந்த பட்ஜெட் 2023 - 24 அன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிகரெட்டுகள் மீதான வரி 16% வரையில் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினால் சிகரெட் நிறுவனங்கள் மீதான வரியானது பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனம் குறித்து சாய்ஸ் புரோக்கிங் தனது அறிக்கையில் முக்கிய அறிக்கையில், ஐடிசியின் முக்கிய லெவல் 400 ரூபாயாக உள்ளது. இதனை உடைத்து செல்லும்பட்சத்தில் இப்பங்கானது, அடுத்த ஓரிரு மாதங்களில் 425 மற்றும் 440 ரூபாயினை எட்டலாம் என கணித்துள்ளது.

மொத்தத்தில் வெளியாகவிருக்கும் ஐடிசி நிறுவனத்தின் வருவாய் விகிதம் குறித்தான அறிக்கைக்கு மத்தியில் இப்பங்கின் விலையானது 1.05% அதிகரித்து, (2.52 மணியளவில்) 399.90 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இன்றைய உச்சமும், 52 வார உச்ச விலையும் 402 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 392.90 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 249.15 ரூபாயாகும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+