இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான ITD சிமென்டேஷன் இந்தியா லிமிடெட், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,505.4% வருமானத்தை அளித்து, மல்டிபேக்கர் பங்காக விளங்குகிறது. பலருக்கு இது அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இப்படியொரு நிறுவனம் இருப்பதே தெரியாது என்பது தான் நிதர்சனமாக உண்மை.
1931-ல் இங்கிலாந்தின் சிமென்டேஷன் கம்பெனி லிமிடெட் கிளையாக தொடங்கிய ITD சிமென்டேஷன், 2005-ல் இத்தாலிய-தாய் டெவலப்மென்ட் (ITD) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது.

இதை 2024-25ல், அதானி குழுமத்தின் ரின்யூ எக்ஸிம், 67.46% பங்குகளை கையகப்படுத்தி, இந்நிறுவனத்தின் ஆதிக்கம் செலுத்தும் பங்குகளை கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் சிவில், உள்கட்டமைப்பு, மற்றும் EPC திட்டங்களில் நிபுணத்துவம் பெற்றது, இந்தியாவின் முக்கிய கட்டுமான நிறுவனமாக உள்ளது.
2020 ஆகஸ்டில் ITD சிமென்டேஷன் வெறும் ரூ.43.90-ஆக இருந்த பங்கு, ஜூன் 27, 2025 அன்று வர்த்தக முடிவில் ரூ.892.60-ஆக உயர்ந்து, ரூ.1 லட்ச முதலீட்டை ரூ.20.19 லட்சமாக மாற்றியுள்ளது. 2024-25ல், அதானி குழுமத்தின் ரின்யூ எக்ஸிம் 67.46% பங்குகளை கையகப்படுத்தியது, இந்நிறுவனத்தை அதானி கூட்டமைப்பில் இணைத்தது மூலம் பெரும் லாபத்தை அடைந்துள்ளது.
ஜூன் 27 வர்த்தக முடிவில் ITD சிமென்டேஷன் பங்கு ரூ.892.60-ஆக வர்த்தகமான நிலையில் இது ஆகஸ்ட் 2020-ல் ரூ.43.90 விலை ஒப்பிடுகையில் 1,919% உயர்ந்துள்ளது. இந்த மல்டிபேக்கர் வருமானம், இந்நிறுவனத்தின் உறுதியான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு துறையில் தனது முக்கிய பங்கு வைத்திருப்பதை காட்டுகிறது.
2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில், ITD சிமென்டேஷனின் வருவாய் 9.23% உயர்ந்து, ரூ.2,279.08 கோடியிலிருந்து ரூ.2,489.43 கோடியாக வளர்ந்தது. அதே காலத்தில், நிகர லாபம் ரூ.89.51 கோடியிலிருந்து ரூ.113.55 கோடியாக உயர்ந்தது. 0.52 என்ற குறைந்த கடன்-பங்கு விகிதம், நிறுவனத்தின் வலுவான நிதி நிலையை காட்டுகிறது.
இதோடு இந்நிறுவனம் தற்போது ரூ.90,000 கோடி மதிப்பிலான ஆர்டர்களை தனது பைப்லைனில் வைத்துள்ளது, 2026-ல் ரூ.15,000-16,000 கோடி ஆர்டர்களை பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு உள்ளது.
ITD சிமென்டேஷன் நிறுவனம் கட்டுமான நிறுவனமாக இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கடல், மெட்ரோ, விமான நிலையங்கள், மற்றும் நீர்மின் திட்டங்கள் போன்ற முக்கியமான திட்டங்களிலும் கவனம் செலுத்துகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications