உலகின் மிக முக்கிய வங்கி தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஜேபிமார்கன் சேஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேமி டிமான் தற்போதைய நிதி சந்தை நிலவரத்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை பெரும் சரிவை நோக்கி செல்லலாம் என்று எச்சரித்துள்ளார்.

2005-2007 உடன் ஒப்பீடு
ஜேமி டிமான் தற்போதைய சந்தை நிலவரம் 2005 முதல் 2007 காலகட்டத்தை நினைவூட்டுவதாக கூறுகிறார். இது 2008ல் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முந்தைய காலக்கட்டம் என்பதால் முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.
ஜேமி டிமான் கூறுகையில் அப்போது சந்தை மிகவும் வலுவாக இருந்தது, சொத்து விலைகள் உயர்ந்தன, நிறுவனங்கள் லாபம் ஈட்டின, மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கைக்கு கீழே பெரிய ஆபத்துகள் மறைந்திருந்தன.
தற்போது சந்தையில் முதலீட்டாளர்களும், முதலீட்டு நிறுவனங்களும் லாபம் ஈட்டுவதற்காக பல்வேறு கோமாளிதனம் செய்து வருகின்றனர். இதனால் "கடலில் பெரும் அலை எழும்போது அனைத்து படகுகளும் மேல உயரும்" இதேபோல் தான் இந்த கோமாளிதனம் மூலம் முதலீட்டாளர்கள் பெரும் பணத்தை சம்பாதித்து வருகின்றனர் என்று விளக்கினார்.
2005 முதல் 2007 வரையிலான காலகட்டத்தை போல் இப்போதும் சந்தை நம்பிக்கை மிகுந்து, லாபம் ஈட்டும் நிலை இருப்பதால் 2008இல் திடீரென பெரும் சரிவு ஏற்பட்டது போல் எப்போது அடுத்த அடி விழும் என டிமான் புலம்புகிறார்.
முட்டாள்தனமான முடிவுகள்
சந்தை ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும் போது சில முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் "வெற்றி பெற வேண்டும்" என்ற எண்ணத்தில் அதிக ரிஸ்க் எடுக்கின்றனர். இதை டிமான் "முட்டாள்தனமான முடிவுகள்" என்று அழைக்கிறார்.
புதிய வரி, AI தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றால் சந்தை மாற்றங்கள் அதிகரிக்கும் போது இந்த ரிஸ்க் எடுக்கும் போக்கு அதிகரிக்கிறது. இது சந்தை அமைப்பை நிலையற்றதாக மாற்றும் என்று அவர் கூறுகிறார். இந்த ரிஸ்க் எடுக்கும் போக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார் ஜேமி டிமான் .
அதீத சொத்து விலைகள் ஏன் ஆபத்தானவை?
சொத்து விலைகள் (பங்குகள், மற்ற முதலீடுகள்) அதிகமாக இருக்கும் போது அது சொத்துகளின் உண்மை மதிப்பை பிரதிபலிக்காது. ஏதேனும் தவறு ஏற்பட்டால் விலைகள் திடீரென சரியும். இது பீதியை ஏற்படுத்தி, விற்பனை அதிகரித்து பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும் நிதி நெருக்கடிகள் பொதுவாக பல பிரச்சினைகள் ஒரே நேரத்தில் ஏற்படும் போது வருகின்றன.
AI தொழில்நுட்பம்
AI தொழில்நுட்பம் தொழில்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டிமான் இதை "பூமியின் உள்ளே டெக்டோனிக் தட்டுகள் நகர்வது போல" என்று விவரிக்கிறார். AI தொழில்நுட்பம் சாஃப்ட்வேர் துறையை மிகப்பெரிய அளவில் மாற்றும். இந்த மாற்றங்கள் இப்போது முழுமையாக தெரியவில்லை, ஆனால் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கிறார்.
மொத்தத்தில், ஜேமி டிமான் இன்றைய சந்தை நம்பிக்கையை 2008க்கு முன் இருந்த நிலைக்கு ஒப்பிடுகிறார். உயர் விலைகள், ரிஸ்க் எடுக்கும் போக்கு, AI மாற்றங்கள் ஆகியவை சந்தையை நிலையற்றதாக மாற்றலாம்.
இதனால் முதலீட்டு சந்தையில் எந்த நேரத்தில் சரிவரலாம், ஆனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்த எச்சரிக்கை உலக முதலீட்டாளர்களுக்கு முக்கியமான செய்தியாக உள்ளது.
More From GoodReturns

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

அந்தர் பல்டி அடித்த அதானி டோட்டல் கேஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!



Click it and Unblock the Notifications