அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் உலகின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனமான அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பிசோஸின் சொத்து மதிப்பு 2 நாட்களில் 2.4 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்து தனது மொத்த சொத்து மதிப்பு 100.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பிளாக் ப்ரைடே
பிளாக் ப்ரைடே நாள் சிறப்பு விற்பனை அமேசான் தளத்தில் மட்டுமல்லாம் அமெரிக்கா முழுவதும் சிறப்பான முறையில் தள்ளுபடி விற்பனை நடந்தது.
ஆனால் அமேசான் தளத்தில் வாடிக்கையாளர் அதிகமான இத்தளத்திலேயே வர்த்தகம் செய்யப்பட்ட காரணத்தால் இந்நிறுவனத்தின் சிறப்பு விற்பனை வெற்றிக் கரமாக நடந்து முடிந்தது.
வெற்றிகரமான விற்பனை
கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் 18.4 சதவீதம் அதிகமான அளவிற்குப் பொருட்கள் விற்பனை ஆகியுள்ள காரணத்தால் அமெரிக்கா ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் புதிய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
பங்கு உயர்வு
இதன் காரணமாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.58 சதவீதம் வரையில் உயர்ந்து 1,186.00 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
100 பில்லியன் டாலர்
இதன் மூலம் 53 வயதான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பிசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு 12 இலக்க எண் அளவில் அதாவது முதல் முறையாக 100 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளார்.
ஒரு வருட உயர்வு
2017ஆம் ஆண்டில் மட்டும் ஜெப் பீசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு 32.6 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகில் எந்தொரு பணக்காரரும் இந்த அளவிற்கு ஒரு வருட வளர்ச்சியைக் கண்டதில்லை என ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.
முதல் இடம்
மேலும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஜெப் பீசோஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 86.8 பில்லியன் டாலர்
வாரன் பபெட்-இன் சொத்து மதிப்பு 78.9 பில்லியன் டாலர்
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications