அதானி குழும பங்குகளை வாங்குவோருக்கு ஜாக்பாட்: கிரீன் சிக்னல் கொடுத்த Jefferies

கௌதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்வோருக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது என உலகளாவிய முதலீட்டு வங்கியான ஜெஃப்ரீஸ் (Jefferies) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அதானி பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

உலகளாவிய முதலீட்டு வங்கியான ஜெஃப்ரீஸ், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமத்தின் வளர்ச்சி குறித்து மிகவும் பாசிடிவான கருத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் 6 பங்குகளையும் வாங்கலாம் என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

அதானி குழும பங்குகளை வாங்குவோருக்கு ஜாக்பாட்: கிரீன் சிக்னல் கொடுத்த Jefferies

அதானி குழுமத்தின் 51 பில்லியன் டாலர் மூலதன செலவின திட்டம், மேம்பட்டு வரும் கடன் விகிதம் மற்றும் ஒப்பந்தங்கள், ஆகியவற்றால் அதானி குழுமத்தின் அடுத்த கட்ட விரிவாக்கம் பிரம்மாண்டமாக இருக்கும் என ஜெஃப்ரீஸ் தரகு நிறுவனம் கூறுகிறது. துறைமுகங்கள், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் பரிமாற்றம், விமான நிலையங்கள் மற்றும் சிமெண்ட் ஆகிய துறைகளில் அதானி குழுமம் மேலும் மேலும் வளர்ச்சியை எட்டும் என தெரிவித்துள்ளது.

இதன்படி , அதானி எண்டர்பிரைசஸ் (Adani Enterprises), அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy), அதானி போர்ட்ஸ் (Adani Ports), அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் (Adani Energy Solutions), அதானி பவர் (Adani Power), அம்புஜா சிமெண்ட்ஸ் (Ambuja Cements) ஆகிய 6 நிறுவன பங்குகளையும் வாங்கலாம் என்றும் 2029-ம் நிதியாண்டில் அதானி குழுமத்தின் வருவாய் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 23 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

Also Read

பல்வேறு உள்கட்டமைப்பு பிரிவுகளில் அதானி குழுமம் முதன்மையான இடத்தை பிடித்துள்ளதாக ஜெஃப்ரீஸ் பட்டியலிட்டுள்ளது. எனவே பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை கண்ணை மூடி கொண்டு வாங்கலாம் நீண்ட கால அடிப்படையில் இவை அனைத்துமே முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை பெற்று தரும் என கூறியுள்ளது.

இன்று பங்குச்சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் ஒரு பங்கு மதிப்பு 2,657 ரூபாயாக உள்ளது. கடந்த ஓராண்டில் இது 42% லாபத்தை தந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு மதிப்பு 1,399 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் இது 31% வளர்ச்சியினை எட்டியுள்ளது.

Recommended For You

துறைமுகங்களை கையாளும் அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு மதிப்பு 1890 ரூபாயாக வர்த்தகமாகிறது. கடந்த ஓராண்டில் இது 25% வளர்ச்சியை தந்துள்ளது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1443 ரூபாயாக உள்ளது. ஓராண்டில் சுமார் 41% வளர்ச்சியை எட்டியுள்ளது. அடுத்ததாக அதானி பவர் பங்கு மதிப்பு 204 ரூபாயாக வர்த்தகமாகிறது. இது ஓராண்டில் சுமார் 50% லாபம் தந்துள்ளது. சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 381 ரூபாயாக உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+