இந்திய ஐடி நிறுவனங்களுக்கு போதாத காலம்: முதலீட்டாளர்கள், ஊழியர்களுக்கு எச்சரிக்கை மணி!!

செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியை காரணம் காட்டி, ஜெப்ரீஸ் நிறுவனம் இந்திய தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவன பங்குகளுக்கான மதிப்பீடுகளை தடாலடியாக குறைத்துள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCLT) மற்றும் எம்ஃபாசிஸ் ஆகியவற்றை 'வைத்திரு' (hold) என்ற பிரிவிற்கும், எல்டிஐ மைண்ட்ரீ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் ஹெக்ஸாவேர் ஆகியவற்றை 'செயல்திறன் குறைவு' (underperform) என்ற பிரிவிற்கும் தரமிறக்கியுள்ளது. இருப்பினும், கோஃபோர்ஜ், சஜிலிட்டி மற்றும் ஐகேஎஸ் ஆகியவை அவற்றின் முதன்மைப் பங்குகளாக (top picks) தொடர்ந்து நீடிக்கின்றன.

உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஜெப்ரீஸ், அனைத்து ஐடி நிறுவனங்களுக்குமான வருவாய் மதிப்பீடுகளை 1-4 சதவீதம் குறைத்துள்ளது. மேலும், 2026-28 நிதியாண்டுகளில் 6 சதவீத வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதத்தை (CAGR) எதிர்பார்க்கிறது. இக்காலத்தில் கோஃபோர்ஜ், சஜிலிட்டி மற்றும் ஐகேஎஸ் ஆகியவை வலுவான வருவாய் வளர்ச்சியால் 19-25 சதவீத வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வேகமாக வளரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு போதாத காலம்: முதலீட்டாளர்கள், ஊழியர்களுக்கு எச்சரிக்கை மணி!!

ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், கட்டமைப்பு ரீதியாக மாறும் என ஜெப்ரீஸ் குறிப்பிட்டது. இதனால், மொத்த வருவாயில் 22-45% சரிவு ஏற்படும். செயற்கை நுண்ணறிவு கருவிகள் மேம்படும்போது இந்த சரிவின் அளவு மற்றும் வேகம் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

"ஐடி நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் என்றும் முதலீட்டாளர்கள் இந்த இடர்பாடுகளை விலை-வருவாய் (PE) விகிதங்களில் கணக்கில் கொள்ள வேண்டும்" என்றும் ஜெப்ரீஸ் ஆய்வாளர்களான அக்‌ஷத் அகர்வால் மற்றும் ஆயுஷ் பன்சால் ஆகியோர் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டில் (CY26) பங்குச்சந்தையில் ஐடி பங்குகள் சந்தைச் சராசரியை விட பின்தங்கியுள்ளன. நிஃப்டி ஐடி குறியீடு 2026ஆம் ஆண்டில் 15 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டது. அதே காலகட்டத்தில் நிஃப்டி 50 குறியீடு சுமார் 2 சதவீதம் மட்டுமே சரிந்தது. ஏஸ் ஈக்விட்டி தரவுகளின்படி, விப்ரோ, கோஃபோர்ஜ், எல்டிஐ மைண்ட்ரீ, பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை 20 சதவீதம் வரை சரிந்த நிறுவனங்களாக இருந்தன.

தற்போதைய விலைகளில், பெரிய ஐடி நிறுவனங்களுக்கு 2026-36 நிதியாண்டுகளில் (இந்திய ரூபாய் மதிப்பில்) 6-14 சதவீத வருவாய் கூட்டு வளர்ச்சி விகிதத்தையும், நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு 9-17 சதவீத வருவாய் கூட்டு வளர்ச்சி விகிதத்தையும் ஜெப்ரீஸ் கணித்துள்ளது. டெர்மினல் வளர்ச்சி விகிதங்கள் விப்ரோவுக்கு 4 சதவீதமாகவும், ஐகேஎஸ் நிறுவனத்திற்கு 7 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சி விகிதங்கள் சஜிலிட்டி, ஹெக்ஸாவேர் மற்றும் ஐகேஎஸ் நிறுவனங்களின் 2016-26 நிதியாண்டு வளர்ச்சி விகிதங்களை விட 6-12% குறைவாகவும், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், கோஃபோர்ஜ் ஆகிய நிறுவனங்களுக்கு 3% குறைவாகவும் உள்ளன. ஆனால், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா (TechM) நிறுவனங்களின் 2016-26 நிதியாண்டு வளர்ச்சி விகிதங்களை விட 1-2% அதிகமாக இருப்பதாக ஜெப்ரீஸ் அறிக்கை கூறுகிறது.

முந்தைய பத்தாண்டுகளுக்கு இணையான நீண்டகால வருவாய் வளர்ச்சிப் பாதையைத் தக்கவைத்துக்கொள்வது ஐடி நிறுவனங்களுக்குச் சாத்தியமான சிறந்த சூழல் என ஜெப்ரீஸ் கருதுகிறது. மோசமான சூழ்நிலையில், 2026-31 நிதியாண்டுகளில் வருவாய் கூட்டு வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் குறைவாக இருக்கலாம் (மொத்தமாக 15 சதவீதம் சரிவு). அதைத் தொடர்ந்து 2031ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த வளர்ச்சியும் இருக்காது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சூழ்நிலையில், பெரிய ஐடி நிறுவனங்களுக்கான விலை-வருவாய் (PE) விகிதங்கள் 14-22x வரை இருக்கலாம். "மோசமான சூழ்நிலையில், பங்குகள் மேலும் 30-65 சதவீதம் வரை மதிப்பிழக்கக்கூடும். 2026-36 நிதியாண்டுகளில் 3 சதவீதம் குறைந்த வளர்ச்சியையும், 1 சதவீதம் குறைந்த டெர்மினல் வளர்ச்சியையும் கருதினால், பெரிய ஐடி நிறுவனங்களுக்கு PE விகிதங்கள் 10-35 சதவீதம் வரையும், நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரையும் மதிப்பிழக்கக்கூடும்" என்று அகர்வால் மற்றும் பன்சால் கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+