அதிரடி சரிவில் ஜூவல்லரி நிறுவன பங்குகள்.. பங்கு சந்தை முதலீட்டாளர்களே உஷார்..!

பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் தொடர்புடையதாக நீராவ் மோடி மட்டும் இல்லாமல் அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் எனச் சேர்ந்து 13 இடங்களில் அமலாக்கத் துறையினரால் சோதனை நடத்தப்பட்டது.

அதிலும் முக்கியமான ஒரு ஜூவல்லரி நிறுவனம் என்றால் து நீராவ் மோடி மாமாவின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ஆகும். அதுமட்டும் இல்லாமல் பஞ்சாப் நேஷ்னல் வங்கி கீதாஞ்சலி நிறுவனத்தின் மீதும் இன்று தனியாகப் புகார் அளித்துள்ளதால் பங்குகளின் விலை தாரு மாறாகச் சரிந்துள்ளது.

கீதாஞ்சலி ஜெம்ஸ்

கீதாஞ்சலி ஜெம்ஸ்

பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி குறித்து மும்பை பங்கு சந்தையில் அறிக்கை தாக்கல் செய்த 2018 பிப்ரவரி 14-ம் தேதி சந்தை துவங்கும் போது 64.15 ரூபாய் ஒரு பங்கு என இருநத்த நிலையில் அன்றைய சந்தை நேர முடிவில் 58.30 ரூபாயாகச் சரிந்தது. நீராவ் மோடி மற்றும் இவரது மீது சிபிஐ-ல் புகார் அளிக்கப்பட்டுச் சோதனை துவங்கியதால் 2018 பிப்ரவரி 15ம் தேதி 20 சதவீதம் வரை சரிந்து 46.80 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமையுடன் சேர்த்து மூன்றாவது நாளான இன்றும் இவருடன் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் 19.88 சதவீதம் என 9.35 புள்ளிகள் சரிந்து 37.45 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

 பிசி ஜூவல்லர்

பிசி ஜூவல்லர்

பிசி ஜூவல்லர் நிறுவனப் பங்குகள் 14-ம் தேதி சரிந்து இருந்தாலும் 15ம் தேதி மற்றும் 16-ம் தேதியான இன்று உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை பிளாட்டாக இருந்து இருந்தாலும் வெள்ளிக்கிழமை பிசி ஜூவல்லர் நிறுவனப் பங்கானது 6.64 சதவீதம் என 23.65 புள்ளிகள் உயர்ந்து 379.95 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

டிரிஹோவாண்டாஸ் பீம்ஜி ஜவேரி லிமிட்டெட்

டிரிஹோவாண்டாஸ் பீம்ஜி ஜவேரி லிமிட்டெட்

டிரிஹோவாண்டாஸ் பீம்ஜி ஜவேரி லிமிட்டெட் நிறுவனப் பங்குகளும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி புகாரினை அடுத்துத் தொடர்ந்து மூன்று நாட்களாகச் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று மட்டும் 3.88 சதவீதம் என 4.40 புள்ளிகள் சரிந்து 109.00 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தங்கமயில் ஜூவல்லரி

தங்கமயில் ஜூவல்லரி

தங்கமயில் ஜூவல்லரி நிறுவனப் பங்குகளும் 14-ம் தேதி முதல் மூன்று நட்களாக 10 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று 4.99 சதவீதம் என 26.85 புள்ளிகள் சரிந்து 510.95 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+