டைட்டனின் சாம்ராஜியம் சரிந்ததா?. 15% பங்குகள் வீழ்ச்சி!. ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு விழுந்த அடி!.

இந்தியாவில் இருந்த மிக முக்கியமான முதலீட்டாளர் என்றால் அது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவை சொல்வார்கள். இவர் பல்வேறு நிறுவனங்களில் வெற்றிகரமாக முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதித்தவர். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பல நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்திருந்தார். அவரது முதலீடுகளில் முக்கியமானது டைட்டன் நிறுவனம். தொடக்கக் காலத்திலேயே டைட்டன் நிறுவனத்தை அடையாளம் கண்டு, அதில் முதலீடு செய்த ஜுன்ஜுன்வாலா இதன் மூலம் பெரிய லாபம் பெற்றார். இவர் கடந்த 2022இல் மறைந்த நிலையில், இவரது பங்குச்சந்தை முதலீடுகள் இவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா மற்றும் குடும்பத்தினர் கவனித்து வருகிறார்கள்.

டைட்டனின் சாம்ராஜியம் சரிந்ததா?. 15% பங்குகள் வீழ்ச்சி!. ரேகா ஜுன்ஜுன்வாலாவுக்கு விழுந்த அடி!.

அந்தவகையில் கடந்த 20 ஆண்டுகளாக டைட்டன் நிறுவனத்தில் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர் முதலீடு செய்துவந்தனர். இந்தநிலையில், எதிர்பார்த்த அளவுக்கு நிறுவனம் லாபம் ஈட்டாத நிலையில், டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவிலான சரிவை கண்டு வருகிறது. இதனால், ரேகா ஜுன்ஜுன்வாலா, 2025ம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டிலிருந்து டிசம்பர் காலாண்டுவரை டைட்டன் நிறுவனத்தில் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தின் பங்குகளை சுமார் 15 சதவீதம் குறைத்துள்ளார். அதாவது, செப்டம்பர் காலாண்டில் இருந்து டிசம்பர் காலாண்டிற்கான பங்கு நிலவரத்தை மதிப்பீடு செய்தபோது, ஜுன்ஜுன்வாலா குடும்பத்தின் டைட்டன் பங்குகளின் அளவு குறைந்துள்ளதாக தெரிகிறது.

Ace Equities வெளியிட்ட தரவுகளின் தேதியின்படி, , செப்டம்பர் காலாண்டின் முடிவில் ஜுன்ஜுன்வாலா குடும்பம் ரூ. 17,481 கோடி முதலீடு செய்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டின் முடிவில் இதன் பங்கு ரூ. 14,741 கோடியாக குறைந்துவிட்டது. அதன்படி, டைட்டன் நிறுவனத்தில் ரேகாவுக்கு 5.4 சதவிகித பங்கு இருக்கிறது. ஆனால், இரண்டு காலாண்டுகளின் பங்கு நிலவரத்தின்படி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், இந்தியன் ஹோட்டல் மற்றும் ஸ்டார் ஹெல்த் & அலையிட் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டில் சிறிய அளவில் உயர்வு காணப்படுகிறது. மேலும், மெட்ரோ பிராண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் NCC லிமிடெட் போன்ற பிற பெரிய பங்குகளின் நிலவரத்தில் எந்த முக்கிய மாற்றமும் காணப்படவில்லை.

குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக டைட்டன் நிறுவனத்தில் பங்குகளை ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர் முதலீடு செய்துவரும் நிலையில், தற்போது அந்த நிறுவனத்தின் பங்குகள் 52 வாரத்தில் இல்லாத அளவுக்கு குறைந்த விலைக்கு வர்த்தகம் செய்யும் நிலையில் உள்ளது. அந்தவகையில் தற்போது நிறுவனத்தின் பங்குகள் சுமார் 15 சதவீதம் சரிந்துள்ளன. அந்தவகையில் தற்போதைய பங்கின் விலை ரூ.3,800 ஆக உள்ளது. இருப்பினும், டைட்டன் நிறுவனத்தில் இன்னும் 1.07% பங்கு வைத்திருக்கிறார் ரேகா.

ஜுன்ஜுன்வாலா குடும்பம் கடந்த 2002ஆம் ஆண்டில் இந்த பங்கில் முதலீடு செய்யத் தொடங்கியது, அந்த நேரத்தில் வர்த்தக விலைகள் சுமார் ரூ.4க்கு அருகிலிருந்தன. 2024ஆம் ஆண்டின் நிலவரப்படி, அந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 11.5 சதவீதம் குறைந்துள்ளன. தற்போது, நிறுவனத்தின் ROCE (Return on Capital Employed) சுமார் 23% ஆக உள்ளது, மேலும் 10 வருட சராசரி ROCE சுமார் 25% ஆக உள்ளது. அதாவது, டைட்டன் வணிகத்திற்கு மூலதனச் செலவாகச் செலவிடும் ஒவ்வொரு ரூ.100க்கும், அது சுமார் ரூ.25 லாபம் ஈட்டுகிறது. இந்த பணத்தை பின்னர் நிறுவனத்தின் பங்குகளை சந்தையிலிருந்து வாங்க அல்லது முதலீட்டாளர்களுக்கு பங்கு லாபங்கள் (டிவிடெண்ட்) வழியாக திருப்பி அளிக்க பயன்படுத்த முடியும்.

நிதிநிலை அறிக்கைகளின்படி, 2019 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை ரூ. 19,779 கோடி இருந்தது, 2024 ஆம் ஆண்டில் அது ரூ. 51,084 கோடியை எட்டியுள்ளது, இது 21% கூட்டு வளர்ச்சியாகும். ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான 3 காலாண்டுகளில், நிறுவனம் ஏற்கனவே ரூ.45,000 கோடிக்கு மேல் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. நிகர லாபத்தைப் பொறுத்தவரை, டைட்டன் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,389 கோடியிலிருந்து ரூ.3,496 கோடியாக 20% கூட்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2024 வரை, நிறுவனம் ஏற்கனவே ரூ.2,466 நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

மார்ச், ஜூன் மற்றும் செப்டம்பர் 2024 இல் முடிவடைந்த காலாண்டுகளில் டைட்டன் நிறுவனத்தின் லாபத்தில் சரிவு காணப்பட்டது. இருப்பினும், டிசம்பர் 2024 இல் முடிவடைந்த காலாண்டில், லாபம் சுமார் 48% அதிகரித்துள்ளது. இதுகுறித்து டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே. வெங்கடராமன் கூறுகையில், " இந்த காலாண்டில் (வரி மாற்றத்தின் போது வைத்திருந்த) சரக்குகளில் சுங்க வரி தொடர்பான இழப்புகள் காரணமாக லாபம் குறைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், டைட்டனின் கடந்த வருடாந்திர விளக்கக்காட்சியின்படி, சர்வதேச வணிகம் 2026-27 நிதியாண்டில் UCP (சீரான நுகர்வோர் விலை) மதிப்பில் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈர்க்கும் வகையில் இலக்கு வைத்துள்ளதாகவும் நிர்வாக இயக்குனர் CK வெங்கடராமன் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+